லாக்டௌனில் அதிகரிக்கும் போதைப்பொருட்களின் பயன்பாடு- திகைக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்
cc
கடந்த சில மாதங்களாக சென்னை,மும்பை, ராஜஸ்தான் உட்பட பல்வேறு நகரங்களில் போதைப்பொருட்கள் கிலோ கணக்கில் பிடிபட்டன. இவற்றை பல்வேறு வடிவங்களில் கடத்தல்கார ர்கள் கடத்த தொடங்கியுள்ளனர். இதனை எப்படி ஆர்டர் செய்கிறார்ளள் என்றால் அது பெரிய விஷயமே அல்ல. எளிமையாக பிட்காயின் முறையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். உங்களுக்கு பல்வேறு வடிவங்களில் போதைப்பொருட்களை வடிவமைத்து கடத்திவிடுவார்கள். சுங்கத்துறை இந்த வகையில் கிலோகணக்கில் போதைப்பொருட்களை கைப்பற்றி வருகின்றன.
ஓபியம்
ஜூலை 29 அன்று பிடிபட்டது.
ராஜஸ்தானின் சிட்டர்கார்க்கில் 234 கிலோ ஓபியம் பிடிபட்டது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களி்ல் உரிம ம் பெற்ற போதைப்பொருட்கள் முகவர்கள்தான் இதனை செய்திருவவேண்டும் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் இந்தளவு போதைப்பொருள் பிடிபட்டது வரலாற்று சாதனை.
சென்னை சுங்கத்துறையில் போதைப்பொருட்ள் நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்தன. எக்டஸி, எல்எஸ்டி ஆகிய மாத்திரைகள் இதில் அடக்கம். ஏப்ரல் மாதம் தொடங்கியே போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 1.7 கிலோ போதைப்பொருட்கள் மாட்டின. இதன் மதிப்பு 9 லட்சம்.
ஜூன் மாதம் கிடைத்த எக்டஸி மாத்திரைகளின் எண்ணிக்கை 770 இதன் மதிப்பு 23 லட்சம் ஆகும்.
ஜூலை கிடைத்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மாத்திரைகள், போதைப்பொருட்களின் மதிப்பு 34 லட்சத்தை எட்டியுள்ளது.
சென்னையிலுள்ள பார்ட்டி, பப்களுக்குச் செல்லும் இளைஞர்கள் இம்முறையில் வெளியே போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். பொதுமுடக்க கால தனிமையைச் சமாளிக்க இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் சென்னை விமானநிலைய சுங்கத்துறை தலைவர் ராஜன் சௌத்ரி.
கருத்துகள்
கருத்துரையிடுக