அணுஆயுதப் போட்டியில் வல்லரசு நாடுகள் ஆடும் சடுகுடு ஆட்டம் ! தி மேன் ப்ரம் அங்கிள்

 

 

 

 

The Man from U.N.C.L.E. Posters | Tom + Lorenzo

 

தி மேன் ஃப்ரம் அங்கிள்

இயக்கம், கய் ரிட்சி

 இசை, டேனியல் மெம்பர்டன் ஒளிப்பதிவு ஜான் மதிசன்

நாஜி ஆட்கள் அணு ஆயுத ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்த ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதை உலக நாடுகள் அறிகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதனை தடுப்பதற்காக தனித்தனியாக ஏஜெண்டுகளை நியமிக்கின்றன. இவர்கள் அனைவரும் அங்கிள் என்ற அமைப்பு மூலம் ஒன்றாக இணைந்து செயல்படு்வதுதான் கதை. இதில் பரஸ்பரம் சந்தேகம் கொண்ட நாடுகளின் உளவாளிகள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  வேறுபாடுகளை கைவிட்டு எப்படி ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துகிறார்கள் என பொறுமையாக சொன்னால் அதுதான் தி மேன் பிரம் அங்கிள்.

அமெரிக்க ஏஜெண்டாக ஹென்றி கெவில், அர்மி ஹாமர், விகாந்தர் என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படம் 007 போல வேகமாக இருக்காது. நிதானமாக பேசியபடியே பல்வேறு காட்சிகள் நகர்கின்றன. இதில் வேகம் கொண்ட காட்சி, திரில்லான காட்சி என்று எதையும் சொல்ல முடியவில்லை. ரஷ்ய ஏஜெண்டிடம் ஹென்றி கெவில் விகாந்தருடன் தப்பி காரில் செல்லும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்த படம் என்பதால் அதற்கான உழைப்பு அதி

நிதானமான உளவு பற்றி திரில்லர் வேண்டுமென்றால் படத்தை பார்க்கலாம்.

கோமாளிமேடை டீம்
 


கருத்துகள்