சூழலுக்கு உகந்த காலணி!
cc |
சூழலுக்கு உகந்த காலணி!
பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் கலந்து பெரும்பாலான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பயன்பாடு குறைந்து குப்பையாக வீசப்பட்டாலும் கூட எளிதில் மட்குவதில்லை. இதன் காரணமாக கலிஃபோர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாகள் ஒருவகை பாசியை பகுதிப்பொருட்களாக கொண்ட காலணிகளை தயாரித்துள்ளனர். இக்காலணி, பயன்பாடு முடிந்தபிறகு பதினாறு வாரங்களில் மண்ணில் மட்கிவிடும்.
பாசியிலிருந்து பெறப்படும் எண்ணெய் இதற்கு முக்கியப் பொருள். இந்த எண்ணெய்யிலிருந்து பாலியூரத்தின் நுரை பெறப்பட்டு அதோடு பல்வேறு செயற்கைப் பொருட்கள் கலந்து காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. ‘’’தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இக்காலணியில் இயற்கையான பகுதிப்பொருட்கள் 52 சதவீதம் உள்ளன. இவற்றை நாங்கள் விரைவில் 100 சதவீதமாக்க முயன்று வருகிறோம்’’ என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேஃபீல்டு. வணிக ரீதியில் பிற காலணிகளைப் போலவே அதிக காலம் உழைக்கும்படியான பகுதிப்பொருட்களை தற்போது சோதித்து வருகின்றனர். விரைவில் சூழலைப் பாதிக்காத காலணிகள் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
https://newatlas.com/environment/algae-based-biodegradable-flip-flops/?utm_source=New+Atlas+Subscribers&utm_campaign=98eae1b9d0-EMAIL_CAMPAIGN_2020_08_10_08_15&utm_medium=email&utm_term=0_65b67362bd-98eae1b9d0-92465209
கருத்துகள்
கருத்துரையிடுக