இந்திய சரணாலயங்களில் பரிதாபமாக பலியாகும் ஆசிய சிங்கம்! - அரசின் கவனக்குறைவு ஏற்படுத்திய அவலம்
cc |
மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம்!
கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார். அவர் கூறாமல் விட்ட விஷயம், நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான். நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள், கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி.
ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி, கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன. இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது. இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன..
”இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்கங்களைப் பார்வையிட்டோம்” என்கிறார் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர்.
சிங்கங்கள் வைரசுக்கு பலியாகும் சம்பவங்கள் 2018ஆம் ஆண்டிலேயே நிகழத் தொடங்கிவிட்டன. குஜராத் வனத்துறை, இதனை தீவிரமாக மறுக்கிறது. ”ஜனவரியிலிருந்து இன்றுவரை 46 சிங்கங்கள் இறந்துள்ளன. ஆனால் அவை பாம்புக்கடி, மின்சாரத்தாக்குதல், முதுமை ஆகியவற்றால் இறந்துள்ளன” என்கிறார் குஜராத் வனத்துறை இயக்குநரான டி.டி.வாசவதா. ”உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி 2013ஆம் ஆண்டு சிங்கங்களை மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் சரணாலயத்திற்கு இடம் மாற்றியிருந்தால் சிங்கங்கள் பலியாகியிருக்காது.” என்கிறார் சூழலியலாளரான ரவி செல்லம்.
தகவல்: டவுன் டு எர்த் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக