இடுகைகள்

ககன்தீப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்!

படம்
ராயல் சொசைட்டில் இந்தியப்பெண்! இங்கிலாந்தின் லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியில் முதல்முறையாக இந்தியப் பெண் ஒருவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.  நானூறு ஆண்டுகள் பழமையான ராயல் சொசைட்டிக்கு அண்மையில் 51 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பத்து நபர்கள் வெளிநாட்டினராகவும், ஒருவர் கௌரவ உறுப்பினராகவும் இருப்பார்.  சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின்(THSTI) இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் ககன்தீப், ராயல் சொசைட்டியில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின் மேம்பாட்டிற்காக உழைத்து, பயிற்சி திட்டங்களை உருவாக்கியது இவரின் தேர்விற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க ரோட்டா வைரஸ் மற்றும் டைபாய்டு காய்ச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை செய்தவர் ககன்தீப். இதற்கான ஆய்வக வசதிகளை உலக சுகாதார நிறுவனம் செய்துகொடுத்தது. இவரின் ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியா மட்டுமல்லாது, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் தடுப்பூசி முயற்சிகள் முன்னேற்றம் அடைந்தன.  CHIM( Controlled Human Infection Model) எனும் முறையில் நோய்க்கிருமிகளை உடல...