ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி
ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம். இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது. அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...