வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!
1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும். கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...