இடுகைகள்

பிபிசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்து ஊடகங்கள் ஈராக் போரின் போது நடந்துகொண்ட முறை! - நூல் விமர்சனம்

படம்
  வாட் தி மீடியா ஆர் டூயிங் டு அவர் பாலிடிக்ஸ் ஜான் லாய்ட் ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜான் லாய்ட் எழுதிய நூல். தனது செய்தி சேகரித்தலுக்காக முக்கியமான விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய இந்த நூல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊடகங்கள், ஈராக் போரின்போது எப்படி அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டன. அதன் விளைவுகள் என்ன என்பதை ஆராய்கிறது.  அரசின் பணத்தில் இயங்கும் இங்கிலாந்து ஊடகமான பிபிசி, ஈராக் போரின் போது எடுத்த நிலைப்பாடு, அதன் இயக்குநர்கள், தலைவர்கள் எப்படி எதுமாதிரியான கருத்தியல் கொண்டவர்களாக இருந்தனர். அரசியல் ரீதியாக ஊடகங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், கருத்தியல், நிர்வாக ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என பல்வேறு விஷயங்களை நூல் பேசுகிறது. இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஊடகங்களை, அங்கு நடக்கும் ஊடக அரசியல் பற்றி பேசிவிட்டு உடனே இங்கிலாந்து நாட்டின் ஊடக பிரச்னைகளுக்கு ஆசிரியர் திரும்பிவிடுகிறார்.  இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை தனியார் தொழிலதிபர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நேரடியான, மறைமுகமான ஆதரவ

இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

படம்
  ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது. ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்த்து

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
  இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்! தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர் நிகோலஸ் மில்டன் பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ் அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.  ஃபிளெட்ஜிலி ங் ஹன்னா போர்ன் டெய்லர் ஆரம் பிரஸ்  கானா நாட்டின் கிராமப்புற  பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி பேரட் இன் தி மிரர் ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.  தி கார்ன்கிரேக் ஃபிராங்க்ரென்னி வொயிட்லெஸ் பப்ளிசிங் வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட பறவைதான் கார்ன்கிரேக். ஆனால் இ

எலுமிச்சையின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி எலுமிச்சம்பழம் மஞ்சளாக தெரிகிறது. எலுமிச்சங்காய் பச்சையாக இருக்கிறது. என்ன காரணம்? எலுமிச்சம்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற வேதிப்பொருள்தான் அதனை மஞ்சளாக மாற்றுகிறது. விவசாயிகள் இதனை பச்சையாக இருக்கும்போது பறித்து பழுக்க வைக்கின்றனர். இதனால் அவை கொண்டு செல்லும் வழியில் பழுத்து சந்தையில் பழுக்க வைக்கப்படுகின்றன. மரத்திலிருந்து அதனை பறித்தவுடனே அதன் வேதிமாற்றங்கள் இயல்பானதாக இருப்பதில்லை. நன்றி - பிபிசி

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச

செர்னோபில் அணுஉலைக் கசிவு விபத்து!

படம்
செர்னோபில் அணு உலைக்கசிவு பிரச்னை தற்போது தீர்ந்துவிட்டதா? ஹெச்பிஓ டிவியில் வெளியான செர்னோபில் பிரச்னை பற்றி ஆவணப்படம், அப்பிரச்னையைப் பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது. ரஷ்யாவை குற்றவாளியாக்கினாலும் ரஷ்ய ஊடகங்களிலும் முக்கியமான ஆவணப்படமாக இதனைப் பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக, உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலைக் கசிவு குறித்த படம், உலகமெங்கும் அதுகுறித்த விவாதங்களை இன்று ஏற்படுத்தி வருகிறது. 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று, செர்னோபிலிலுள்ள ரியாக்டரில் பாதிப்பு ஏற்பட்டது. இன்றுவரையும் அணு உலை எதிர்ப்பாளர்கள் உதாரணமாக காட்டும் அளவு கொடூரமாக இருந்தது இந்த விபத்து. கதிர்வீச்சு பாதிப்பால் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் இன்றுவரை அந்த அணு உலை அருகிலுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்குள்ள ஐந்து சதுர கிலோமீட்டர்களிலுள்ள பைன் மரங்கள், கதிர்வீச்சினால் சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறியுள்ளன. நேரடியாக மனிதர்கள் பாதிக்கப்பட்டதோடு, உளவியல் ரீதியாகவும் பாதிப்பின் அளவுகள் உள்ளன. செய்தி - சயின்ஸ் போகஸ்

அறிவியலில் நகைச்சுவை சாத்தியமா?

படம்
நேர்காணல் எலைன் வான் வெல்டன் பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்றவராக உங்களை மக்கள் பார்ப்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் நீங்கள் ரகசியமான ஆய்வாளராக இருந்திருக்கிறீர்கள்.  ரைட். நான் ரகசியமான ஆய்வாளர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். இது என்னுடைய சிறுவயது கனவு. நான் லண்டனிலுள்ள இம்ப்ரீயல் கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்தேன். நான் முனைவர் பட்டம் பெறவில்லை என்றாலும் பிளாஸ்மா பிசிக்ஸ் படித்துள்ளேன். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக நடித்துள்ளேன். என் வாழ்க்கையே பெரும் சோதனைதான். உங்களுடைய இயற்பியல் பின்னணிதான் அறிவியல் பற்றிய வெப் சீரிஸ் செய்யக் காரணமா? நான் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில், நான் காமெடி நடிகராக நடித்து வந்தேன். மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். பிறருக்கு பாடம் சொல்லித்தருவது எனக்கு பிடித்த பணி. கிரேசி சயின்ஸ் தொடரும் அப்படி ஒன்றுதான். உங்கள் மனதிலிருந்து சொல்லுங்கள் நீங்கள் காமெடி நடிகரா அல்லது அறிவியலாளாரா? நான் இரண்டையும் சொல்ல மாட்டேன். நான் ஆணாதிக்கம் கொண்ட இந்த இரண்டு துறைகளிலும் பொருந்திப்போகும

டைனமோக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு உதவுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டைனமோக்களைப் பயன்படுத்தினால் எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை அதிகரிக்க முடியுமா? இன்றைய கார்களில் கைனடிக் வகை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான செட்டிங்குகள் உண்டு. பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் கார்களுக்கு இந்த அமைப்பு மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கலாம். இப்போது கார்களின் சக்கரங்கள் இயங்கும்போது கிடைக்கும் ஆற்றல் பேட்டரிகளில் சேகரிக்கப்படுகிறது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.100 சிசி வண்டி என்றாலும் முழுத் திறனில் அது ஓடாது. எனவே சிறியளவிலான ஆற்றல் சேகரிப்பு மட்டுமே இப்போது சாத்தியமாகும். நன்றி: பிபிசி

மவுத்வாஷ் பயன்படுத்தலாமா?

படம்
பிபிசி குழந்தைகள் மவுத்வாஷ் பயன்படுத்தலாமா? 6-14 வரையிலான குழந்தைகள் ப்ளூரைடு கலந்த பற்பசை, மவுத் வாஷ் பயன்படுத்தும்போது, பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுவது உண்மைதான். ஆனால் உணவு உண்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்தி பற்களின் நலம் காப்பாற்றப்பட்டதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. எனவே பல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு மவுத்வாஷ் பரிந்துரைக்கலாம். நன்றி: பிபிசி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டெக்னாலஜி!

படம்
பிபிசி ஏன்? எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி இன்றுள்ள அனைத்து தொழிற்நுட்பங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்தால் எப்படியிருக்கும்? ஜாலியான கற்பனைதான். ஆனால் இன்றுள்ள உலகம் நமக்கு கிடைத்திருக்காது. அப்போதே தொலைபேசி, அட்வான்ஸ் வாகனங்கள் என்று போரிட்டு உலகை உடைத்து கடாசியிருப்பார்கள்.  நம் முன்னோர்கள் வழியாக கத்தி, வாள், கோடாளி என போரிட்டு இன்று லேசர் கதிர்களை ஆயுதமாக்குவது வரை முன்னேறியிருக்கிறோம். இன்று உலகில் உள்ள மக்கள்தொகையில் அன்று 4 சதவீதம் மட்டுமே இருந்தனர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.  அதேசமயம் கரிம எரிபொருட்களின் ஆபத்தை உணர்ந்த முன்னோர்களால் நாம் இன்று முழுக்க சூழலுக்கு உகந்த பொருட்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உட்பட பயன்படுத்த தொடங்கியிருப்போம். குறைந்தபட்சம் அதிக மாசுபாடு பிரச்னைகளைக் குறைத்திருக்கவும் வாய்ப்புண்டு.  வேக்குவம் ட்யூபில் மணிக்கு 8 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டிருப்போம். பேசாமல் மூளை - கணினி இணைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை பார்க்கும் நுட்பம் வந்திருக்கும் என ஆச்சரியங