அறிவியலில் நகைச்சுவை சாத்தியமா?



BH_STILL_8


நேர்காணல்

எலைன் வான் வெல்டன்

பிபிசி நிகழ்ச்சியில் பங்கேற்றவராக உங்களை மக்கள் பார்ப்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் நீங்கள் ரகசியமான ஆய்வாளராக இருந்திருக்கிறீர்கள். 

ரைட். நான் ரகசியமான ஆய்வாளர் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். இது என்னுடைய சிறுவயது கனவு. நான் லண்டனிலுள்ள இம்ப்ரீயல் கல்லூரியில் எம்எஸ்சி இயற்பியல் படித்தேன். நான் முனைவர் பட்டம் பெறவில்லை என்றாலும் பிளாஸ்மா பிசிக்ஸ் படித்துள்ளேன். பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக நடித்துள்ளேன். என் வாழ்க்கையே பெரும் சோதனைதான்.

உங்களுடைய இயற்பியல் பின்னணிதான் அறிவியல் பற்றிய வெப் சீரிஸ் செய்யக் காரணமா?

நான் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில், நான் காமெடி நடிகராக நடித்து வந்தேன். மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். பிறருக்கு பாடம் சொல்லித்தருவது எனக்கு பிடித்த பணி. கிரேசி சயின்ஸ் தொடரும் அப்படி ஒன்றுதான்.

உங்கள் மனதிலிருந்து சொல்லுங்கள் நீங்கள் காமெடி நடிகரா அல்லது அறிவியலாளாரா?

நான் இரண்டையும் சொல்ல மாட்டேன். நான் ஆணாதிக்கம் கொண்ட இந்த இரண்டு துறைகளிலும் பொருந்திப்போகும் ஆள் கிடையாது.  நான் கிளாசிக்கான காமெடி நடிகர் கிடையாது. இத்துறையில் எனக்கான பாணியை நான் இன்னும் உருவாக்கவில்லை. காதல் நகைச்சுவைகளை உருவாக்குவதும் அதில் நடிப்பதும்தான் என் கனவு.


எப்படி அறிவியல் காமெடியை உருவாக்குவீர்கள்? ஏனெனில் இயற்பியல் என்பது அதற்கான வாய்ப்பைத் தருகிறதா?

முடியாது என்று கூறமுடியாது. நான் அதற்காகத்தான் முயற்சிக்கப்போகிறேன். இயல்பாகவே நம்மைச்சுற்றிலும் அறிவியல் தொடர்பாக நகைச்சுவை உள்ளது. அதைத்தான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழில்: ச.அன்பரசு

நன்றி: பிபிசி








பிரபலமான இடுகைகள்