இனிப்பு சோளம் செரிமானம் ஆவதில்லை ஏன்

Why is sweet corn not digested? © Getty Images



ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி


இனிப்பு சோளத்தை சாப்பிட்டால் அது ஜீரணமாக தாமதம் ஆவது ஏன்?


பீச்சில் சோளம் வாங்கித் தின்று செரிமானம் ஆகாமல் இப்படியொரு கேள்வியா? எதுவாக இருந்தாலும் சரி அறிவியலாக பார்ப்போம். சோளம் சிறந்த உணவு. எப்படி என்றால் அதில் மாவச்சத்து அதிகம். ஆனால் செரிமானத்திற்கு பிரச்னை வருவது அதிலுள்ள செல்லுலோஸால்தான். இதனை செரிமானத்திற்காக உடைப்பது மிக கடினம்.

சரி எதற்குங்க பிரச்னை முழுங்கிடுவோம் என்று முழுங்கினாலும் சில சோள பற்கள் வயிற்றுக்குள் கிடக்கும். அதாவது செரித்து வெளியே வர நேரம் எடுக்கும். நீங்கள் சாதாரணமாக சோளத்தை சாப்பிட்டாலும் அதில் செரிமானமாகி வருவது முழுக்க அரைபட்டு என்ற விதம் மிக குறைவுதான்.


நன்றி: பிபிசி