தரம் வேண்டுமா? எண்ணிக்கை வேண்டுமா?
இருபத்தொரு மாநிலங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் ஆந்திரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது.
பெண்களுக்கான ஊதியத்தில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பாஸ் மார்க் வாங்குகின்றன. இதில் வேலைவாய்ப்பு , சம்பளம் என இரண்டு விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன.
பீகார், உபி எப்போதும்போல இந்த விஷயத்திலும் பின்தங்கி உள்ளன.
சம்பள இடைவெளி விஷயத்தில் கேரளா முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
சத்தீஸ் வேலைவாய்ப்புகளைத் தருவதில் முன்னிலை வகிக்கிறது. காரணம், இங்கு கட்டுமான வேலைகள் அதிகம் உள்ளன. கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன. குறிப்பாக இங்கு பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மிக குறைவு.
கேரளத்தில் கல்வி அறிவு அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதற்கான வேலைக்கு அவர்கள் முயற்சிப்பார்கள் என்பதாலேயே இங்கு வேலைவாய்ப்பு என்பது பெரிதாக உயரவில்லை.
அரசுத்துறை இல்லாத பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு இன்றும் வேலைக்கான பாதுகாப்பு இல்லை. வேலைவாயப்பு விவகாரத்தில் படுமோசமாக செயல்படுவது கேரளமும், கோவாவும்தான். விற்பனைப் பிரிவு, விவசாயம் தவிர்த்த பிற வேலைகளில் செயல்பாடு மோசமாக உள்ளது உத்தரப்பிரதேசமும், ஜார்க்கண்டும்தான்.