ஒற்றைத் தலைவலிக்கான தீர்வுகள்


George Marks/Getty Images




ஒற்றைத் தலைவலிக்கு இன்று விக்ஸ், அமிர்தாஞ்சன் ஸ்ட்ராங், ஜண்டு பாம் , டைகர் பாம் என விதவிதமான தீர்வுகள் உண்டு. ஆனால் அன்று ஒரே தீர்வு, பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும் கைமருந்துகள்தான். இல்லை ஆயா சொல்லும் பச்சிலை மருந்துகள்தான்.

ரத்தம் வெளியேறினால் தலைவலி நிற்கும்

ஆம். நவீன மருத்துவம்  வரும் முன்பு உடலிலிருந்து  குறிப்பாக மூக்கிலிருந்து சிறிது ரத்த த்தை வெளியேற்றினால் தலைவலி குறையும் என ஊர் என்ன உலகமே நம்பியது.

பின்னர் ஸ்விஸ் நாட்டு மருத்துவர், சாமுவேல் அகஸ்டே தலைவலிக்கான மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தினார்.

பூண்டு


பேய் வந்தால் பூண்டைக் காட்டி தப்பிவிடலாம் என பேய் சீரியல்களை தூர்தர்ஷனில் பார்த்து நம்பிய அப்பாவி நான். ஆனாலும் பூண்டை தலைவலிக்கு பயன்படுத்தலாம் என்று கூறியபோது பெரிய ஆச்சரியமில்லை. வாயு சமாச்சாரத்திற்கு இதனைப் பயன்படுத்தும்போது வலி சமாச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதா? என சமாதான சகாவு ஆனேன்.


11 ஆம் நூற்றாண்டு அபு அல் காசிம் எனும் மருத்துவர் பூண்டை தலைவலிக்கான சூப்பர் மருந்தாக பரிந்துரைத்தார்.  கையில் காயம் செய்து அதில் பூண்டைப் புதைத்து விநோத வைத்தியம் சொன்னார். எத்தனைபேர் இதனை கடைபிடித்தார்களோ, எனக்குத் தெரியாது சாமி.


மின்சார ஷாக்

டார்பெடோ மீன், தொடும் எதனையும் மின்சாரத்தால் ஷாக் கொடுத்து கொல்லும். அப்புறம் எத்தனையோ விஷயங்கள் இந்த மீன் சாதிக்கிறது இந்த தொல்லை பிடித்த தலைவலி எம்மாத்திரம் என யோசித்தார் மருத்துவர் ஸ்கிரபோனியஸ் லார்கஸ். ரோம மன்னர் கிளாடியஸின் அரசு மருத்துவர். அரசு எப்படி நடந்திருக்கும்?  மக்களுக்கு ஷாக்காக இருந்திருக்கும்.


இதோடு களிமண்ணில் நடக்கும் வைத்தியங்களும் ஒற்றைத் தலைவலி சிக்கல்களுக்கு மருந்துதான்.



நன்றி: மென்டல் ஃபிளாஸ்