அமெரிக்கா ஈரானைத் தாக்கப்போகிறதா?

Image result for hedgehog vs fox

அமெரிக்காவிற்கு நரியையும், ஈரானுக்கு முள்ளம்பன்றியையும் எடுத்துக்காட்டாக சொல்லி டஜன் கணக்கில் கட்டுரைகளை எழுதிவருகின்றனர். 

அண்மையில் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியது. ஈரான் அமெரிக்காவில் புகுந்து பென்டகனில் இருந்த விமானத்தை சுடவில்லை. அவர்களது வான் எல்லையில் புகுந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து ஆவேசப்பட்ட 73 வயதான ட்ரம்ப், ஈரானின் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆணையை வெளியிட்டு உடனே திரும்ப பெற்றிருக்கிறார். 


எண்பது வயதான அயதுல்லா கோமெனி, ஈரானை 30 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார். அமெரிக்காவிற்கான எதிர்ப்பு என்பதை அவர் எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை. இன்று மக்களிடையே பேசும்போதும், அமெரிக்காவின் தோல்வி, அதற்கு எதிராக ஈரானின் நிலைப்பாடு என்ற வார்த்தைகள் நீக்கமற இடம்பெறுகின்றன. இதனைக் குறிப்பிடும் அரசியல் பார்வையாளர்கள் ஷேக்ஸ்பியர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள் நரியைப் போன்றவர்கள். கார்ல் மார்க்ஸ் முள்ளம்பன்றியைப் போன்றவர்கள். நரி பல்வேறு விஷயங்களை அறிந்ததுதான். முள்ளம்பன்றி தன்னைக் காத்துக்கொள்ளும் விஷயத்தை மட்டுமே அறிந்துள்ளது என்று கிரேக்க கவிஞர் ஆர்ச்சிலோசஸ் குறிப்பிடுகிறார்.

ட்ரம்ப் தனக்கு முன்னே ஆட்சி செய்த அதிபர்கள் செய்த தவறை தானும் செய்கிறார் என்ற விமர்சிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஒரு நாட்டின் உள்ளே சென்று ட்ரோன் விமானத்தை பயன்படுத்துவதை எந்த நாடும் அனுமதிக்காது. அது குறிப்பிட்ட நாட்டிடம் மானியம் வாங்கும் ஏழை நாடாக இருந்தாலும் சரி. பாகிஸ்தானை விட்டுவிடுங்கள். அமெரிக்காவும் ஈரானும் அமைதி உடன்படிக்கையில் ஈடுபடுவதே வணிகத்திற்கும், வளம் பொருந்திய வாழ்வுக்கும் நல்லது. 


அமெரிக்கா இனி சீனாவை மிஞ்சி பொம்மை அதிபர்களை அனைத்து இடங்களிலும் நியமிப்பது சிரமம். சீனா அந்த இடத்திற்கு வந்து பல ஆண்டுகளாகிறது. ட்ரம்ப், உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை கைவிட்டு போர் முயற்சியை கையில் எடுத்தால், அது அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதாகவே இருக்கும். அவர்கள் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவதை  விட்டுவிட்டு ஈரானின் பொருளாதாரத்தை அழிக்கும் தடை விளையாட்டுகள் நிச்சயம் வணிகப்போரை உருவாக்கும். 

சீனா நிச்சயம் இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படாது. உலக நாடுகளின் ஆதரவின்றி இனி அமெரிக்கா போர் விவகாரங்களில் முடிவெடுப்பது வருங்காலத்திலும் கடினமாகவே இருக்கும். 


நன்றி: அட்லாண்டிக்












பிரபலமான இடுகைகள்