அசுரகுலம் - வூ யாங்டாங் - கோடரி கொலைஞர்!
அசுரகுலம்
வூ யாங்டாங்
கோடரி கொலைஞர் என்று சொல்லலாம். காதலி, மனைவி, அடுத்த வீட்டுக்காரர் என்றெல்லாம் பார்க்கவில்லை. நா பேரு சூர்யா அல்லு அர்ஜூன் போல, கோபம் வந்தது அடிச்சேன் என்பது போல, கோபம் வந்தது கொன்றேன் என்று கொன்று போட்ட கோலைகாரர்.
மொத்தம் கொன்றது பத்து பேர்களை. 1999 -2003 வரையிலான காலகட்டத்தில் சம்பவங்களை நிகழ்த்தினார். கொலை எதற்கு கொள்ளை மற்றும் சந்தோஷத்திற்காகத்தான். முதல் கொலையே தன் பெண்தோழியைக் கொன்றதுதான். என்ன இம்சை கொடுத்தாளோ? திருமணமாகி மனைவி சகிதமாக மயில்வாகனத்தில் வீற்றிருந்த யாங்டாங்கை ஒரே கேள்வி கேட்டாள் தோழி. என்ன கேட்டாள்? நான்தான் இருக்கேனே அப்புறம் எதற்கு வொய்ஃப் என. யாங்டாங் அதற்கு கோடரியை எடுத்து அதன் மூலமே பதில் சொன்னார். அடுத்த நாள் கொலைவெறி அடங்காமல் தன் மகளை வெட்டிக்கொன்றார். இரண்டு பேரின் உடல்களையும் கிணற்றுக்குள் எறிந்துவிட்டு அடுத்த சோலியைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
2001 அக்டோபரில் இன்னொரு பெண்தோழியையும் கொல்ல முயற்சித்தார். கூடவே அட்டையாய் அவளின் அக்காவும் ஒட்டிக்கொண்டாள். வேறுவழியின்றி இருவரையும் வெட்டிக்கொன்று பிரச்னையைத் தீர்த்தார்.
சொந்த பிரச்னைகளுக்காக கொலை செய்வது தனி. காசுக்கு கொலை செய்யும் அசைன்மெண்டுகளையும் ஏற்றுக்கொண்டு காசு பார்த்தார். 2004 ஆம் ஆண்டு தன் மற்றொருமொரு பெண்தோழியின் கணவரைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். போலீசின் விசாரணையில் பிற கொலைகளையும் வாக்குமூலமாக சொல்ல போலீஸ் அதிர்ந்து போனது. கோர்ட்டில் பேசும்போது, முதல் கொலை செய்த துதான் எனக்குத் தெரியும் . அதற்குப்புறம் கொலை செய்வது எனக்கு பழக்கமாகிவிட்டது என கூறினார். இவ்வளவு அதுப்பாக பேசினால் எந்த வக்கீல் உங்களைக் காப்பாற்ற முடியும். யெஸ். நைலான் கயிறை நாசூக்காக போட்டு கழுத்தில் இறுக்கி கொன்றார்கள்.
ஆக்கம் -பொன்னையன் சேகர்
நன்றி: ரிவால்வி, மர்டர்பீடியா