காமம் தீர்ந்தால் கொலைவாசம்!
அசுரகுலம்
லீ பிங்பிங்
டாக்சி டிரைவர்தான் வேலை. இதில் என்ன கொலை செய்ய இருக்கிறது? பணம்தான். விபச்சாரிகள் டாக்சி ஓட்டுபவர்களை விட அதிகமாக சம்பாதிக்க முடிகிறது என லீ நம்பினார். எனவே ஏழு பேர்களை அசாத்திய மன உறுதியுடன் கொன்றார். 2002 -03 காலகட்டத்தில் இந்த கொலைகள் நடந்தன.
விலைமாதுக்களை இரவு நேரத்தில் நைட் கிளப்பில் பிக் செய்தார் லீ. பெண்களிடம் பேச என்ன இருக்கிறது? நேரே காரியத்தைப் பார்த்தார். பசி தீர்ந்தபின் எச்சில்தட்டை பத்திரப்படுத்த வேண்டுமா என யோசித்தார். அவர்களிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு கொன்றார். உடல்களை குப்பைத்தொட்டியில் காகிதம் போல எறிந்துவிட்டார்.
இவையின்றி சாங் என்பவரின் குடும்பத்தையை கத்தியால் குத்தி அதகளம் செய்தார் லீ. என்ன காரணம்? லீயை பணிநீக்கம் செய்து கையில் நயாபைசா இன்றி திரியவைத்ததுதான். 1995 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது.
இதில் பலரும் அதிர்ச்சியானது, அத்தனை குற்றங்களுக்கும் மனைவி துணையாக இருந்ததுதான். இதனால் போலீஸ் இருவரையும் கைது செய்தபோது மனைவிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. கொலைகளைச் செய்த லீக்கு அதேதான். மரணதண்டனை விதித்து மார்ச் 2004 ஆம் ஆண்டு அரசு நீதிமன்றம் பேனா நிப்பை முறித்தது.
1960 ஆம் ஆண்டு பிறந்த லீயின் வாழ்க்கை, 2004 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று முடிவுக்கு வந்தது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: லிஸ்ட்வர்ஸ், ரிவால்வி, மர்டர்பீடியா
படம்: பின்டிரஸ்ட்