ஆபரேஷன் டோர்ஸ்டெப் - உண்மையில் நடந்தது இதுதான்!
அணுகுண்டு வெடித்தால் என்னாகும்?
அமெரிக்காவில் 1953 ஆம் ஆண்டு, அணுகுண்டு வெடித்தால் என்னாகும் என்று அறிவதற்கான சோதனையைச் செய்தனர். இதற்காக நெவடா பாலைவனத்தில் வீடுகளைக் கட்டினர்.
அணுகுண்டு வெடிக்கும் இடத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் வீடு கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் டோர்ஸ்டெப் என்று பெயரிடப்பட்டது.
90 மீட்டர் உயரத்திலிருந்து 150 கிலோ டன் அணுகுண்டு கீழே விழுந்து வெடிக்க வைக்கப்பட்டது. பாதிப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஏற்பட்டதுபோலத்தான் இருந்தது. ஆனால் கட்டப்பட்ட வீடுகள் உடைந்து நொறுங்கினாலும் கீழ்ப்பகுதி மாத்திரம் பெரிய பாதிப்பின்றி தப்பியது.
நன்றி:பிபிசி