வளர்ச்சி திட்டங்களால் அழியும் சிறுத்தைகள்!
இந்தியா வளருகிறது சிறுத்தைகள் அழிகின்றன.
2019 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் 219 சிறுத்தைப்புலிகளை நாம் இழந்துவிட்டோம். இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு 500 சிறுத்தைகள் இறந்தன. இதுகுறித்த அறிக்கையை இந்திய கானுயிர் சொசைட்டி வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு முதல் சிறுத்தைகளைக் கண்காணித்து அவற்றைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறது.
பெரும்பாலான சிறுத்தைகள் உணவு, நீருக்காக அலைந்து கிணற்றில் விழுந்தும், அடித்து கொல்லப்பட்டும், சுடப்பட்டும் இறந்துபோகின்றன. குறிப்பிடத்தக்கபடி ரயிலில் அடிபட்டும் சிறுத்தைகள் நிறைய இறந்துபோகின்றன.
2014 ஆம் ஆண்டு 41, 2015 ஆம் ஆண்டு 51, 2017 இல் 63, 2018 இல் 80 என சிறுத்தைப்புலிகள் இறந்துபோயுள்ளன. மேற்சொன்ன காரணங்களோடு விவசாய நிலங்களில் அமைக்கப்படும் மின்வேலிகளும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்இறந்துபோக முக்கியக்காரணம்.
உலக இயற்கை கானுயிர் யூனியன் அமைப்பில் சிறுத்தைகள் சிவப்பு பட்டியலில் ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வனச்சட்டம் 1972 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தைப்புலி உள்ளது.
சிறுத்தைப்புலிகள் காடுகளின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. மனிதர்களுக்கும் சிறுத்தைகளு க்கும் ஏற்படும் மோதல் காடுகளின் அழிவை உருவாக்குகிறது. சிறுத்தைகள் மான்கள், குரங்குகளை வேட்டையாடி அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
கிராம ப்புறம் சார்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கி வருகிறது. இதன் விளைவாக, காடுகளின் பரப்பு சுருங்கி வருகிறது. உணவுக்காக சிறுத்தைகள் கிராமத்திற்கு வருகையில் மனிதர்களிடையே மோத வேண்டியுள்ளது. இம்முறையில் தேசிய கானுயியர் கழகம், பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் உருவாகவிருந்த 519 திட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
- இந்தியாஸ்பெண்ட்.
image - Unsplash