''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...