இடுகைகள்

மின்னூல் 2024 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுரங்கம் ஆடும் போர்வீரன் - இநூல் வெளியீடு

படம்
            சீன நாட்டின் அதிபரான ஷி ச்சின்பிங், வறுமை ஒழிப்பு, இணைய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சீனக்கனவு, வெளிநாட்டு வணிகம் தொடர்பாக பேசிய இருபது உரைகளைக் கொண்ட நூல் இது. இந்த உரைகளின் வழியாக மக்களுக்கு எளிமையாக கூறவரும் செய்தியை எப்படி எடுத்துச்சொல்கிறார், அதன் வழியாக எதிர்பார்க்கும் விஷயங்களையும் நிதானமாக எடுத்து வைப்பதைக் காணலாம். இளம் வயதில் கட்சி உறுப்பினராக இருக்கும்போதே மக்கள் பிரச்னைகளைப் பற்றி உள்ளூர் நாளிதழில் 232 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஷி. பிரச்னைகளை தீர்வுகளை நோக்கி மக்கள் விவாதிக்கும்படி நகர்த்தினார். இக்கட்டுரைகளை வாசித்த மக்கள், அதன் எளிமையான வடிவத்தையும், பிரச்னைகளை பேசும் முறையையும் பாராட்டினர். இப்படி மக்களுக்காக செய்த செயல்களின் வழியாக மக்களின் செயலாளர் என்ற பெயரைப் பெற்றார். இந்த நூலை வாசிக்கும் ஒருவர் மக்களை நேசிக்கும் தலைவர், என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்கிறார். நாட்டை முன்னேற்ற விரும்புகிறவர், எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சர்வாதிகார நாடு, ஒற்றைக்கட்சி ஆட்சிமுறை என ச...

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு!

படம்
                நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு இந்த நூலை எழுதுவதற்கான சிந்தனை, தென்கொரியக் கவிஞரான கோயுன் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது உருவானது. இணையத்தில் சற்று எளிமையான பௌத்த நூல்கள் ஏதேனும் கிடைக்குமா என தேடத் தொடங்கினேன். அப்படித்தான் தம்மிகா என்ற பௌத்த துறவியின் நூல் கிடைத்தது. அவரது நூல் ஏற்கெனவே இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பற்றிய குறிப்பில், அவர் எழுதிய சிறிய நூல், செவ்வியல் தன்மை கொண்டது என புகழப்பட்டிருந்தது. மதம் சார்ந்த இலக்கியங்களில் செவ்வியல்தன்மை என புரிந்துகொண்டால் சரி. என்னுடைய புரிதலுக்கு ஏற்றபடி நூலை எழுதியிருக்கிறேன். பிறரோடு ஒப்பீடு செய்துகொள்ள விரும்பவில்லை. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு நூலுக்கு மொழிபெயர்ப்பு வரவேண்டும். இச்செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான், அந்த நூல் காலத்திற்கேற்ப மாறுதல்களை சமாளித்து உயிர்வாழும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் ஆகியவற்றில் இருந்து பௌத்தம் வேறுபட்டிருப்பதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர், ஓஷோ ஆகியோர் தங்களது பல நூல்களி...

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் - மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
           

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW