இடுகைகள்

செல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

படம்
  reem hajajreh - yael admi இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி.  ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர்.  அவர்கள் நாட்ட

குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

படம்
  1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்த செயல்கள் எப்

உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், எலும்புகளின் பணி என்ன?

படம்
              உடலிலுள்ள செல்கள் , உறுப்புகள் , கட்டமைப்பு ஆகியவை உடலின் இயக்கம் தடையற நடைபெற உதவுகின்றன . திசுக்கள் செல்கள் இணைந்து பல்வேறு வித திசுக்களை உருவாக்குகின்றன . நமது குடல் பகுதி , நான்கு வகை திசுக்களால் உருவானது . இதில் செரிக்கப்பட்ட உணவு தவிர்த்த கழிவுகளை குடலுக்குள் தள்ளும் தசைகளும் உள்ளடங்கும் . உடலிலுள்ள செல்கள் அனைத்தும் விதவிதான அமைப்பைக் கொண்டவை . அவற்றின் செயல்பாடும் இதுபோலவே மாறுபடும் . குடலிலுள்ள சில வகை செல்கள் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன . உடலிலுள்ள அனைத்து பாகங்களின் உருவாக்கத்திலும் செல்களின் பங்குண்டு . அதிக எண்ணிக்கையிலான செல்கள் இணைந்துதான் திசு உருவாகிறது . திசுக்கள் ஒட்டுமொத்த உருவம்தான் உறுப்புகள் . உறுப்புகள் உடலின் செயல்பாடுகள் நடைபெற உதவுகின்றன . நரம்பு செல்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் முக்கியமான சமிக்ஞைகளை உடலெங்கும் கடத்துகின்றன . இவை மூளைக்கு அனுப்பப்படுகின்றன . தசை செல்கள் உடலின் தசைகளை இறுக்கமாக்கி அதனை சுருக்குகின்றன . கால் மற்றும் கைகளின் தசைகளை நீட்டி நெகிழ்த்தவும் உதவுபவரை தசை செல்கள்தான் . உடல்

செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள்

படம்
    ராபர்ட் ஹூக் செல் ஆராய்ச்சியில் சாதனை படைத்தவர்கள் ராபர்ட் ஹூக் 1635-1703   கட்டுமானம், பழங்காலவியல், வானியல் என பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி சாதனை படைத்தவர். இவர் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர். இவர் ஐசக் நியூட்டனின் கருத்துகளில் வேறுபாடு கொண்டவர். ஆன்டனி வான் லியூவென்ஹாக் 1632-1723 டச்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, கூடவே ஆராய்ச்சியாளரும் கூட. கூடைகளை தயாரிப்பவரின் மகனாக இருந்தாலும்  ஆராய்ச்சி செய்யும் திறனால் நுண்ணுயிரிகளை காணும் நுண்ணோக்கிகளை உருவாக்கினார். ஒற்றை செல் உயிரிகளை அடையாளம் கண்டார். தியோடர் ஸ்வான் 1810-1882 ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர். நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகளை செய்தார். நரம்பு மண்டலம், வளர்சிதை மாற்றம், செரிமானம் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்தார். பின்னாளில் இறையியலின் மீது கவனம் செலுத்தினார். கமில்லோ கோல்ஜி 1843-1926 இத்தாலிய மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர். நரம்பு மண்டலம் பற்றி ஆராய்ச்சி செய்தவர் பின்னர் அப்படியே மலேரியா ஆராய்ச்சிகளுக்கு வந்து சேர்ந்தார். இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு தான் பிறந்த

உடல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா?

படம்
உடல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக்கொள்கிறதா? ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதிய மனிதனாக புதிய செல், புதிய டிஎன்ஏ என பாம்பு போல சட்டை உரித்து வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்படிக்கூறுவது உண்மையாக என்று பார்ப்போம். நம் உடலிலுள்ள செல்கள் மிடோசிஸ் என்ற பெயரில் புதிய செல்களை உருவாக்கிக் கொள்கிறது. தானாக இச்செல்கள் தம்மை பிரதியெடுத்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்கின்றன. இரண்டாவது, ஸ்டெம் செல்களிலிருந்து புதிய செல்களை உருவாக்குவது.  இதில் ரத்த செல்கள் மற்றும் நரம்பு செல்கள் மட்டும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள முடியாதவை. செல்களின் வாழ்நாளை எளிதாக கணிக்க முடியாது. நம் வயிற்றிலுள்ள செல்கள் இரு நாட்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. உடலின் தோல் செல்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இறந்து பிறக்கின்றன. ரத்த செல்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வெள்ளை அணுக்கள் வாரத்திற்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்து புதிதாக்கிக் கொள்கிறது. நம் உடலிலுள்ள எலும்புகள் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகிறது. நன