இடுகைகள்

கருத்தியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  டியூக் பல்கலைக்கழகம், சீனா நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா! சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம். இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்   போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேற்குநாடுகளின் அறிவியல், பொறியிய

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

கருத்தியலை விட எப்படியாவது வெற்றிபெறுவதுதான் இன்று முக்கியமாகிவிட்டது! - சத்ருகன் சின்கா, இந்தி நடிகர்

படம்
  இன்று கருத்தியல் கடந்து வெற்றி முக்கியமானதாக மாறியுள்ளதா? அரசியலில் இன்று கருத்தியல் எல்லாம் கிடையாது. இறுதியில் வெற்றி பெறுவதே முக்கியம் என மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிகாரம்தான் அனைவரும் அடைவதாக மாறியிருக்கிறது.  கோவில்களுக்கு செல்ல டிக்கெட்டுகள் அவசியமா? நான் இதை ஏற்கிறேன். கோவில்களுக்கு உள்ளே செல்ல எந்த வித சீட்டுகளும் தேவையில்லை. அவை எப்போதும் மக்களுக்காக திறந்து இருக்கவேண்டும்.  கிரிக்கெட் வீரர், நடிகர் தன்னை நிரூபிக்க சில திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிக்கான திறன், தகுதிகள் என்னென்ன? தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெல்லவேண்டும். வெற்றிக்குப் பிறகும் நீங்கள் மக்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் இந்தி வட்டாரத்திலும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர்களின் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியப் படங்களின் கதைகளோடுதான் அவர்களும் இணையாக பயணிக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல அவர்கள் அதிகளவு வசூல் பெற்றிருக்கலாம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் உள்ள தொழில்துறைகள் என்பதை