கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

 






எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே

எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ



சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்!


மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார்.

1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்  கட்சி ஆட்சியில் இருந்தது.

பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்  சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார்.

‘’நேர்மறை சிந்தனை என்பது மக்களுக்கு ஓபியம் போல. ஒரு நல்ல சூழ்நிலையைக் கூட அந்த சிந்தனை முட்டாள்தனமாக்கிவிடும். நீண்ட காலம் வாழுங்கள் ட்ராஸ்கி’’ என்ற மிலனின் ஜோக் நாவல் வாசகத்தை செக் நாட்டைச் சேர்ந்த இளைஞர் கடிதத்தில் எழுதி காதலிக்கு அனுப்பிவைத்தார். இதை எழுதிய காரணத்தாலேயே இளைஞர் காவல்துறையில் பல்வேறு பிரச்னைகளுக்கு  ஆளானார். அந்தளவுக்கு மிலனின் மீதான கோபம் காவல்துறைக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இருந்தது.

மிலன், தான் எழுதிய நாவலுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 1950ஆம் ஆண்டிலேயே நீக்கப்பட்டவர் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார். பிறகு அவரை கட்சி மீது வைத்த விமர்சனங்களுக்காக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர். இதன் மூலம், கல்லூரியில் செய்து வந்த வேலை பறிபோனது. இதை எப்படி ப் பார்க்கலாம்? உண்மையில் அவர் நாவலை எழுதாமல் இருந்தால் எதுவுமே மோசமாக நடந்திருக்காது. ஆனால் மிலன் தவறான முடிவை எடுத்தார். அதன் விளைவுகளை ஏற்றுக்கொண்டார். தனது முடிவுகளுக்காக அவர் வருந்தவில்லை.

இவரது வாழ்க்கையைப் பார்த்தால் அவரது நாவலில் வரும் பாத்திரங்கள் தொடர்ச்சியாக போராடுவதன் காரணத்தை அறியலாம். கடந்த காலத்தை பிடிக்க முயன்று, எதிர்காலத்தை கணித்துக்கொண்டு இடையில் தாவி நிற்கும் குணம் மிலனுக்கு உண்டு. ‘அன்பியரபிள்  லைட்னஸ் ஆஃப் பீயிங் ‘  என்ற நாவலில் வரும் தாமஸூக்கு எழுத்தாளர் மிலனைப் போன்ற சாயல் உண்டு. அவர் எடுக்கும் தவறான முடிவால் அறுவை சிகிச்சை வல்லுநராக இருந்து கட்டிடத்தின் கண்ணாடிகளை துடைக்கும் பணியாளராக மாறுகிறார். சரியோ தவறோ தான் காதலித்த தெரசாவுடன் வாழ்கிறார். கடைசிவரையில் எதிர்ப்பக்கங்களுடன் மோதிக்கொண்டே இருக்கிறார்.

தனது நாட்டைவிட்டு பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற மிலன், அங்கு பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டு நூல்களை எழுதி மக்களை ஈர்த்தார்.  செக் மொழியைப் பேசி  வந்தார். தனது கருத்துகளை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டு தனது செக்கோஸ்லோவியா நாட்டுக்கு திரும்பிச்செல்ல அனுமதி பெற்றார்.

 மிலன் இலக்கியங்களை உலகத்திற்காக எழுதினார்., தன்னை உலக குடிமகன் என்று எண்ணி வந்தார்.

செக் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மிலன் குண்டெரா தனது 94 வயதில் காலமானார்.  

தி எகனாமிஸ்ட்

22 ஜூலை 2023

குறிப்பு

தமிழில் மிலனைப் பற்றி இலக்கிய குரங்குகள் யூட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்று உள்ளது. அதைப்பார்க்கலாம். 


கருத்துகள்