பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பிடித்த தொழில் இயக்குநர்கள், தலைவர்கள்

 





ஆஸ்லி மெக்வாய், ஜான்சன் அண்ட் ஜான்சன்

சைலேஸ் ஜேஜூரிகார், பி அண்ட் ஜி

காத்ரின் மெக்லே, வால்மார்ட்

ஆஸ்லி மெக்வாய்



ஹெதர் சியான்ஃபிராகோ


ஃபார்ச்சூன் 500

ஆஸ்லி மெக்வாய்

மெட்டெக், உலகளாவிய தலைவர், ஜான்சன் அண்ட் ஜான்சன்

ஆஸ்லிக்கு 52 வயது. நிறுவனத்தின் இயக்குநர் ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது பிரிவு வருமானம் 2022ஆம் ஆண்டில் 27 பில்லியனாக உயர்ந்திருக்கிறது.

இதய பம்புகள், முழங்கால் மாற்று கருவிகள், அறுவைசிகிச்சை ஸ்டேப்லர்கள், மார்பக மாற்றுகள் ஆகியவற்றை மருத்துவமனைகளுக்கு விற்கும் பணியைச் செய்கிறார். மொத்தம் 60 ஆயிரம் பணியாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். ஜான்சன் நிறுவனத்தில் உள்ள மொத்த பணியாளர்களில் இவர்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சனின் மெக்நீல் கன்ஸ்யூமர் பிஸினஸ் பிரிவின் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் டைலெனால், ஸையர்டெக், மைலண்டா என ஏராளமான மருந்துகளை உருவாக்கினார். பிறகு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு வணிகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. மெட்டெக்கின் மருந்து வணிகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் பெயரில்தான் உள்ளது. ஆஸ்லியோடு பணியாற்றியவர்கள், அவர் ஆச்சரியமான அதேசமயம் வலிமையான தலைவர் என கூறுகிறார்கள்.

#ashley mcevoy

2

ஹெதர் சியான்ஃபிராகோ

இயக்குநர், ஆப்டம் ஆர்எக்ஸ் யுனைடெட் ஹெல்த் குரூப்

சியான், தனது நாற்பத்தொன்பதாவது வயதில் மூன்றாவது முறையாக இயக்குநர் பதவியை ஏற்று செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஆப்டம் ஆர்எக்ஸ் என்ற நிறுவனம், 100 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது.

இதற்கு முன்னர் சியான் ஆப்டம் ஹெல்த் சர்வீஸ், ஹெல்த்கேர் கம்யூனிட்டி ஆகிய நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். பென்சில்வேனியாவில் வழக்குரைஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பதினைந்து ஆண்டுகளாக நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்து சாதனை செய்திருக்கிறார். முழுமையான, வலிமையான தலைவர் என இவருடன் பணியாற்றிய பிறர் கருத்து கூறுகின்றனர்.

#Heather cianfrocco

சைலேஷ் ஜேஜூரிகார்

செயல்பாட்டு அதிகாரி, பிஅண்ட் ஜி

முப்பது ஆண்டுகளாக பி அண்ட் ஜியில் பணியாற்றி வருகிறார். 1989ஆம் ஆண்டு உதவி பிராண்ட் மேனேஜராக தனது வேலையைத் தொடங்கினார் சைலேஷ். வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கான இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2021ஆம் ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்று  இயங்கி வருகிறார். இவருக்கு முன்னர் இந்த பதவியில் இருந்த ஜான் மோல்லர், பி அண்ட் ஜியின் தலைவராக, இயக்குநராக, போர்டின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றை லத்தீன் அமெரிக்கா, இந்தியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு  நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செய்து வருகிறார்.  

#shailesh jejurikar

 

காத்ரின் மெக்லே

தலைவர், இயக்குநர்

சாம் கிளப், வால்மார்ட்

ஏற்கெனவே, மெக்லே தான் ஒரு சிறப்பான இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். வால்மார்டின் பிரிவாக சாம் கிளப் உள்ளது. இந்த பிரிவு தனி நிறுவனமாக பிரிந்தாலும் கூட அதை நடத்தும் திறன் பெற்றவர். 2019ஆம் ஆண்டு, நிறுவனத்தின் இணைந்தவர் பெருந்தொற்றை சமாளித்து வருமானத்தை 84 பில்லியனாக மாற்றியிருக்கிறார். அதாவது, 42 சதவீத வருமான உயர்வு. இவரது சாதனை காரணமாகவே ஃபார்ச்சூன் 500 பட்டியலில் 47ஆவது இடத்தில் வால்மார்ட் உள்ளது.

2015ஆம் ஆண்டு வால்மார்டில் துணைத்தலைவராக பதவியேற்றவர், அதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் வூல்வொர்த் குழுமத்தில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சாம் கிளப்பிற்கு வருவதற்கு முன்னரே தன்னை நிறுவன இயக்குநராக்கிக்கொள்ள பல்வேறு திறன்களைக் கற்றுக்கொண்டவராக காத்ரின் இருந்தார்.

வூல்வொர்த் குழுமத்தில் விநியோக முறை, கணக்கு தணிக்கை செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ளார். பிறகு, வால்மார்ட்டின் சிறிய கடைகளில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று பணியாற்றி அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

#Kathryn mclay

 

ஃபார்ச்சூன்

ஜி.சி, கே.சி, பி.எம், ஜி.சி

 


கருத்துகள்