தேடுபொருள் யாதுமிலை - கடித நூல் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்
தேடுபொருள் யாதுமிலை நூல், இரா.முருகானந்தம் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பெரும்பான்மையாக கொண்டுள்ளது. இந்த கடிதங்களின் வழியே பத்திரிகை பணி, அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், சந்தித்த மனிதர்கள், எழுத்துப்பணி, தனிப்பட்ட மனநிலை என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலகட்டத்தை கல்லில் பொறிப்பது போலத்தான் அமைகின்றன. மன்னர் என்றால் கல், எழுத்தாளன் என்றால் சொல் சரிதானே?
ஆரா பிரஸ்ஸின் வெளியீட்டில் கடித நூல்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் இந்த நூலும் முக்கியமானது. பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு நிதானமாக ஒன்றை ஆழ்ந்து பார்க்கும் புரிந்துகொள்ளும் எண்ணம் குறைந்துபோய்விட்டது. கடிதங்கள் எழுதும்போதும், அதற்குப் பிறகு அதை கையில் எடுத்து வாசிக்கும்போதும் பல்வேறு வகையான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் தேடுபொருள் யாதுமிலை கடித நூல், உங்களுக்கும் பல்வேறு நினைவுகளை, உங்கள் நட்புவட்டம் சார்ந்து உருவாக்கலாம். நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் வாசிப்பு வேட்கை கொண்டவர்களுக்கு பரிந்துரையுங்கள். மிக்க நன்றி
தலைப்பு உதவி
கவிஞர் பாரதிதாசன்
நூலை வாசிக்க...
https://www.amazon.com/dp/B0CBDT577P
நன்றி
திரு.கணியம் சீனிவாசன் அவர்கள்
புள்ளியியல் துறை அதிகாரியும், மேன்மை மிக்க மனிதருமான மாண்புமிகு திரு.ராமமூர்த்தி அய்யாவு அவர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக