இடுகைகள்

விளையாட்டு -தேவேந்திர ஜாஜாரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றுத்திறனாளியின் வின்னிங் ஸ்டோரி!

படம்
 கேல்ரத்னா வீரரின் வெற்றிக்கதை! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவ்லின் த்ரோ விளையாட்டு வீரர் தேவேந்திர ஜாஜாரியா, இந்திய அரசின் கேல்ரத்னா எனும் உயரிய அங்கீகாரத்துக்கு தேர்வாகியுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல்? மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் 2 தங்கங்களை பெற்றுத்தந்துள்ள ஒரே வீரர் ஜாஜாரியா. 'கேல்ரத்னா' பரிந்துரை பட்டியலில் விசேஷ இடமும் அதற்காகத்தான். அங்கீகாரங்கள்,கௌரவங்கள் வலியின்றி கிடைத்துவிடுமா என்ன? 1980 ஆம் ஆண்டு பிறந்த ஜாஜாரியாவுக்கு மரம் ஏறி விளையாடுவது என்றால் கொள்ளைப்பிரியம். அன்றும் அப்படி ஒரு மரத்தில் ஏறி நண்பர்களுடன் விளையாடியபோதுதான் நடந்தது அந்த விபரீதம். விளையாட்டு மும்முரத்தில் அருகிலிருந்து மின்கம்பியை கிளையென நினைத்து தொட, தூக்கியெறியப்பட்டு நினைவிழந்து வீழ்ந்த ஜாஜாரியா, கண்விழித்தபோது மருத்துவமனையில் கிடந்தார். மூளையில் தீராத வலியின் குத்தல். தலை திருப்பி கையை பார்த்தபோதுதான், இடக்கை வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. "இடதுகை பொசுங்கி அகற்றப்பட்டபிறகு அனுதாப பார்வைகளுக்கு பயந்து