இடுகைகள்

மரபணு செம்மையாக்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசி தீர்க்குமா மரபணு செம்மையாக்கல் நுட்பம்?

படம்
உணவுத்தேவைக்கு உதவும் மரபணு செம்மையாக்கல் நுட்பம்!  மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை விட மரபணு செம்மையாக்கல் தொழில்நுட்பம் எதிர்கால உணவுத்தேவையை தீர்க்கும் என உயிரியல் ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சீனா, இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, சுகாதாரமான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பிரச்னைகளும் பற்றாக்குறையும் தொடங்கிவிட்டது.  இதற்கான தீர்வாக விவசாய நிலத்தை அதிகரிப்பது சாத்தியம் அல்ல.  பல்வேறு நாடுகளும் அறிவியல் முறையில் மரபணு மாற்ற பயிர்களை விளைவித்து உணவுத்தேவையைத் தீர்க்க முயன்று வருகின்றனர். இம்முறையில் கத்தரிக்காய், சோளம், பருத்தி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் மகசூல்  குறைவு, செலவு  ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு சர்ச்சைகள் எழும்பி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, மரபணு செம்மையாக்கல் நுட்பம் உதவும் வாய்ப்பு உள்ளது. மரபணு மாற்ற பயிர்களை அறிவியல் துறையில் ட்ரான்ஸ்ஜெனிக் க்ராப்ஸ்(Transgenic Crops) என்று அழைக்கின்றனர். நோய்தடுப்புக்காக தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மரபணுக்களை எடுத்து பயிர்களின் மரபண