இடுகைகள்

உணர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி

படம்
  ஜப்பானிய ஹைகூ தமிழில் தி.லீலாவதி அன்னம் பதிப்பகம் தமிழிணையம் கவிஞர் அப்துல் ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில் வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன. தினத்தந்தி, மாலைமதி, தேவியின்   கண்மணி, பாக்யா வரை அனைத்து நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும் இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம். ஜப்பானிய ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.   பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக இருக்கிறது.   உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதோ ஓ.. வண்ணத்துப்பூச்சி என்ற ஹைகூ அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். இதேபோல

குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

படம்
  கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும். மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,   1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர். குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடிய

உணர்வுகளால் ஆனது சமையல்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  16.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  இங்கு ஞாயிறு. சிறப்பு திரைப்படம் போல சிறப்பு லாக்டௌன். அறையில் அடைந்து கிடப்பது பெரும் அவஸ்தை. ஊருக்குப் பொங்கலுக்குப் போனவர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யும் ஆப்ஷனைப் பெற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். நான் அமேசானில் ஆர்டர் செய்த புத்தகங்கள் வந்துவிட்டன. இரு புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டன. இன்னும் ஒரு புத்தகம் மாத இறுதியில் கிடைக்கும். மூன்றாவது நபரிடமிருந்து அமேஸான் வாங்கிக் கொடுப்பதால், காலதாமதம் என விளக்கம் கொடுக்கிறார்கள்.  ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாத இதழில், நடிகர் நஸ்ரூதின்ஷா பேட்டி படித்தேன். சமகாலத்தைப் புரிந்துகொண்டு ஓடிடி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். நேர்காணலில் நிறைய விஷயங்களை காலப்போக்கில் புரிந்துகொண்ட அனுபவத்தில் பேசியிருந்தார். சினிமாவில் முஸ்லீம்கள் பங்களிப்பு, முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை, பிரிவினை, புதிய இயக்குநர்கள் என அனைத்துக்கும் விளக்கமாக பதில் சொல்லியிருந்தார். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் தீனி. சசி என்பவர் இயக்கிய படம். அதிக உடல்நிலை கொண

உராங்குட்டான் நகைச்சுவை உணர்வுமிக்கது!

படம்
  டாக்டர் பைருட் கால்டிகாஸ் விலங்கியலாளர் பைருட் கால்டிகாஸ், இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உராங்குட்டான்களை ஆராய்ந்து வருகிறார். பூர்விகம், கனடா. கனடாவிலுள்ள சைமன் ஃபிரேஸர்  பல்கலைக்கழகத்தில் அகழாய்வுத்துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.   நீங்கள் உராங்குட்டானை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள் என நினைவிருக்கிறதா?  பள்ளியில் படிக்கும்போது, டைம் லைஃப் புத்தகத்தைப் படித்தேன். அதில், ஆண் உராங்குட்டான் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். மனிதர்களோடு அதிக ஒற்றுமை கொண்ட குரங்கினம்.  அந்த புகைப்படம், இன்றுவரையும் என் மூளையில் மறக்கமுடியாத நினைவாக  உள்ளது.  உராங்குட்டானை 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறீர்கள். அவற்றைப் பற்றி வரையறை செய்யமுடியுமா? வால்ட் டிஸ்னி உருவாக்கிய அனிமேஷன் விலங்குகள் போன்றவை தான்  உராங்குட்டான்கள். மனதில் நகைச்சுவை  உணர்வு நிரம்பியவை. அவற்றின் உணர்ச்சிகளை நீங்கள் கூர்ந்துகவனித்தால், எனது கருத்தைப் புரிந்துகொள்ளலாம்.  பல்கலைக்கழக படிப்பை முடித்தவுடன் உராங்குட்டானைப் பற்றி ஆய்வு செய்ய எப்படி முடிவு செய்தீர்கள்? அப்போது எனக்கு வயது 19. என்னுடைய பேராசிரியர், ஆப்பிரிக்காவி

நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!

படம்
  கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.  மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை  பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.  உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.  ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.  வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.  இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.  டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உணர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றன பிஐஇஇசட் 0

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட

தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

படம்
            நம் உணர்வுகளில் முதலில் உருவானது எது? சுவையுணர்வு அடிப்படையானது. அதுவே முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். இதில் முடிவான தீர்வு என்பதை கூற முடியாது. காதுகளில் ஒலியைக் கேட்பது பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை. 275 மில்லியன் ஆண்டுகளாக அத்தன்மை அப்படியேதான் உள்ளது. 2015ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லங்ஃபிஷ் சிறப்பாக காது கேட்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர். 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மீன்கள், தங்கள் துடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் நடந்து சென்று வெவ்வேறு நீர்நிலைகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறன்கொண்டவை என இந்த மீன்களைக் குறிப்பிடுகின்றனர். தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்? மனிதர்கள் இயல்பாகவே புத்துணர்ச்சியாக காற்று, உடற்பயிற்சி, சூரிய வெளிச்சம் ஆகியவற்றை தவிர்க்க முடியாத தன்மை கொண்டவர்கள். சூழல் நெருக்கடியால் அப்படி நேரும்போது அதனை மனதளவில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த மன நெருக்கடியை பதற்றம் எனலாம். இதனை சமாளிக்க சூழலை மெல்ல பழ