இடுகைகள்

ரிது வர்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான