மிலிட்டிரி மாமனாரை வசீகரித்து டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்ய குண்டு மாப்பிள்ளை செய்யும் களேபர காரியங்கள்!
வில்லேஜிலோ விநாயகுடு கிருஷ்ணா, சரண்யா மோகன், ராவ் ரமேஷ் தெலுங்கு தான் பார்க்கும் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு சரியாக இருப்பாள் என அடம்பிடிக்கும் மிலிட்டரி அப்பா. அவரை சமாளித்து குண்டான காதலனை கணவராக ஏற்கச் செய்யும் மருத்துவராக உள்ள மகள். இந்த பாசம் எனும் கோட்டிங்கில் உள்ள மேலாதிக்க போட்டியில் யார் வென்றது, தோற்றது எந்த தரப்பு என்பதே கதை. தெலுங்கில் இதுபோல கதைகள் வருவது புதிதல்ல. மாமனாரின் ஒப்புதலைப் பெற மருமகன் பல டாஸ்க்குகளை செய்து நிரூபித்து காதலியைக் கைபிடிப்பது என்பது நிறைய படங்களில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. வேறுபாடு ஒன்று உண்டு. அது நாயகனின் எடை. மன்னிக்கவும். நாயகனின் குண்டான உருவம். உருவக்கேலி சார்ந்த வசனங்களே படம் நெடுக நிறைந்திருக்கிறது. பங்குச்சந்தை விவரங்களில் புத்திசாலி, நன்றாக சமைப்பார், சமயோசித புத்தி, காதலி மீது மட்டுமல்ல பிறர் மீது காட்டும் அக்கறை என கார்த்திக் பாத்திரம், காதலியின் அப்பா, அவரது குடும்பத்தினரை விடவே பலமடங்கு மேலாக உள்ளது. ஆனாலும் படத்திலுள்ள பாத்திரங்கள் அனைவருமே கார்த்திக்கின் உடல் எட...