இடுகைகள்

சத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு.  உண்மை அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது.  கொழுப்பு என்றாலே கெட்டதுதான். உண்மை 1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதயநோய், உடல் பரு

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

கொழுப்பை முதன்மையாக கொண்ட கீட்டோ உணவுமுறை!

படம்
  கீட்டோ உணவுமுறை கீட்டோஜெனிக் உணவு கீட்டோ உணவு முறைக்கு, என்ன அர்த்தம். பெயர் ஃபேன்சியாக கொண்ட உணவுமுறை என்பதல்ல பதில். குறைந்த மாவுச்சத்து, அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுமுறை என்று அர்த்தம். தினசரி இருபது அல்லது முப்பது கிராம் அளவுக்கு மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளும் உணவுமுறை கீட்டோ. ஒரு ஆப்பிளில் உள்ள மாவுச்சத்தின் அளவு. உணவுமுறையில் மாவுச் சத்தைக் குறைத்தால் ஒருவருக்கு ஏற்படும் பசியின் வேகம் குறையும். இதன் வழியாக உடல் எடை குறையும். மாவுச்சத்து, புரதம் ஆகிய இரண்டையும் குறைத்துவிட்டு உடலின் தேவைக்கான ஆற்றல் கொழுப்பு மூலம் பெறப்படுகிறது.   ஒருவரின் உடலுக்கான ஆற்றல்   70-80 சதவீதம் கொழுப்பிலிருந்தும். 15-20 சதவீதம் வரை புரதத்தில் இருந்தும், 5-10 சதவீதம் வரை மாவுச்சத்தில் இருந்தும் பெறப்படுகிறது. அமெரிக்கர்கள், தமது உடல் ஆற்றலை மாவுச்சத்திலிருந்து 50 சதவீதமும், புரதத்திலிருந்து 15 சதவீதமும், கொழுப்பிலிருந்து 30 சதவீதமும் பெறுகிறார்கள். புரத தேவையைக் குறைத்து உணவுமுறையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் 65 வயதுக்கு மேலும் நலமுடன் வாழ முடிவதாக ஊட்டச்சத்து அறிவியல் தொடர்பான ஆய்வறிக்கை தகவல் கூ

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்

இலைகளிலுள்ள பச்சை நிறம் என்பது இயல்பானதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? இலைகளின் பச்சை நிறம் என்பது இயல்பானதா? நிலப்பரப்பு சார்ந்து நமது நிறத்திற்கும், மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பு போலத்தான் இலைகளின் நிறமும் அமைகிறது. அனைத்து மரங்களின் இலைகளிலும் குளோரோபில் உள்ளது. இந்த நிறமிதான்  ஒளியை இலைகளுக்கு ஈர்த்து தருகிறது. கூடவே உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் மூலம் ஒளியாற்றலை தனக்கான போஷாக்கான சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உள்ள வேறு நிறமிகள் குளோரோபில் அளவுக்கு திறன் கொண்டவையாக இல்லை. அவை ஆற்றலை குளோரோபில்லுக்குத்தான் அனுப்புகின்றன. மஞ்சள், ஆரஞ்சு என்றுள்ள இந்த நிறங்களை கரோட்டினாய்டு என்று அழைக்கின்றனர். இவை பீட்டா கரோட்டின் வகையைச் சேரந்தவை. பீட்டா  கரோட்டின் என்பதுதான் கேரட்டிற்கு ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது.  பனிக்காலத்தில் இலைகள் முற்றி வயதானவையாக மாறும். இலைகளில் இப்போது குளோரோபில் இருக்காது. பிற நிறங்களும் காணாமல் போய் மெல்ல பழுப்பு நிறத்திற்கு மாறி உடையும் தன்மையை அடையும். இலைகளில் உள்ள பச்சை நிறத்தை எடுக்கும் முறையை குரோமோட்டோகிராபி என்று அழைக்கின்றனர்.  நனைந்த காகிதத்தில் நீரில் கரையும் இங்கினால் எழுதியிருந்தால் அந்த எழுத்துகள் எப

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செல்வதில்லை. புத

தெரிஞ்சுக்கோ - சீசனே இல்லாத சூப்பர் வாழைப்பழம் !

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வாழைப்பழம் சாப்பிடாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேலான வெரைட்டிகளில் வாழைப்பழம் பஜார்களை நிரப்பி வருகிறது. எல்லா சீசன்களில் நம் வாயை நிரப்பி பசியை ஆற்றுவது வாழைப்பழம்தான். அதற்காக அதனை ஏழைகளின்...... என்று எந்த பெயர் சூட்டவும் எனக்கு ஆர்வமில்லை. எப்போதும் கிடைக்கும் எளிய பழம் அது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம். எப்போதும் விளையும் பழம் என்பதால், பூஞ்சைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாழைப்பழத்தின் சதவீதம் அதிகம். ஒரு வாழைத்தாரில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? விடுங்கள். விற்கும் செட்டியார் எண்ணுவார். உலகளவில் 473 பழங்கள் இருந்ததே சாதனையாக கூறுகிறார்கள். மனிதர்களுக்கும் வாழைப்பழத்திற்குமான மரபணுப் பொருத்தம் 60 சதவீதமாக உள்ளது. உலகளவில் 5.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. உலக சந்தையில் 99 சதவீத வாழைப்பழங்கள் கேவண்டிஷ் ரக வாழைதான். அமெரிக்கா கடந்தாண்டில் மட்டும்  2.8 பில்லியன் மதிப்பிலான வாழைப்பழங்களை இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் வாழைப்பழத

விட்டமின் சி சத்து உடலுக்கு அவசியமா?

ஏன்?எதற்கு?எப்படி?  - மிஸ்டர் ரோனி விட்டமின் சி உள்ள பொருட்களை சாப்பிடுவது அவசியமா? நிச்சயமாக. ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை என கண்ட இடங்களில் நண்பர்களின் காசிலாவது வாங்கி குடியுங்கள். இல்லையெனில் ஸ்கர்வி பிரச்னை ஏற்படும். விட்டமின் சி சத்தை உடல் தானாக உருவாக்கிக்கொள்ளும் தன்மை முன்னர் இருந்தது என்றும் பின்னர் அந்த திறனை காலப்போக்கில் உடல் இழந்து விட்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நாம் 61 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த திறனோடு இருந்தோம் என்கிறது 2011 ஆம் ஆண்டு ஜெனிடிகா என்ற இதழில் வெளியான ஆய்வு. புளிப்பு அதிகமான பொருட்களை சாப்பிடும்போது முகம் கோணலாகும். அதனை மீ போனில் புகைப்படமாக எடுத்து ரசியுங்கள். ஆனால் பழங்களை சாப்பிடுவதை கைவிடாதீர்கள். அறுசுவை உணவுகளும் உடலுக்கு அவசியம். நன்றி: லிவ் சயின்ஸ்