இடுகைகள்

100 ஆண்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

படம்
  எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் ! கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள்.  இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது. தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. து

எகிப்து சுதந்திரமான தன்னாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டு! - எகிப்து

படம்
  எகிப்து தொன்மையான காலங்களில் எகிப்து நிறைய முன்னேற்றங்களைப் பெற்றிருந்தது. அதாவது, குடிமைச்சமூகமாக முன்னேறியிருந்தது. தகவல் தொடர்பு, வேளாண்மை, நகரம், மதம், அரசு நிர்வாகம் என அனைத்தையுமே சொல்லலாம்.  கிரேக்கர்கள், ரோமன்ஸ், பைஸான்டியர்கள், ஓட்டமான் என பலரின் கையில் எகிப்து சென்று வந்தபிறகுதான் அதற்கு விடுதலை கிடைத்தது.  1805ஆம் ஆண்டு ஒட்டமான் தலைவர் முகமது அலி, எகிப்தின் வைஸ்ராயாக இருந்தார். இவர்தான் ஒட்டமான் அரசின் மன்னர் சார்பாக எகிப்தை ஆட்சி செய்தார்.  1882ஆம் ஆண்டு எகிப்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதற்கு காரணமாக அமைந்ததுதான் ஆங்கிலோ எகிப்திய போர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தை வெய்ல்டு புரோடெக்டரேட் என்று அழைக்கிறார்கள். அதாவது சட்டரீதியான ஆட்சி செய்யவில்லை என்று பொருளைப் புரிந்துகொள்ளலாம்.  1914ஆம் ஆண்டு ஒட்டமான் அரசர், முதல் உலகப்போரில் கலந்துகொண்டார். அதில் அதிகாரத்தின் பக்கம் நின்று போரிட்டார்.  பிறகுதான் ஆங்கிலேயர்கள், எகிப்தை சுதந்திர நாடாக அறிவித்தனர்.  1922ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று எகிப்துக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒட்டமான் அரசின் அதிகாரம் அங்கே இல்லாமல் ஆனது.