இடுகைகள்

அருணாசலப் பிரதேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய பாலூட்டி! இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் (ZSI), புதிய பாலூட்டி இனத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். வெள்ளைக் கன்ன மக்காவ் குரங்கு (White Cheeked Macaque)                                           தான் அது. சீனாவில் 2015ஆம் ஆண்டு இந்த மக்காவ் குரங்கினத்தைக் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவில், அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்தில் மக்காவ் குரங்கினத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். சீனாவுக்கும் இந்த இடத்திற்குமான தொலைவு 200 கி.மீ. ஆகும்.  இதுபற்றிய கட்டுரை, சர்வதேச ஆய்விதழான அனிமல் ஜீனில் வெளியாகியுள்ளது.  ”இப்போது நடந்துள்ள கண்டுபிடிப்பு என்பது தற்செயலான விபத்து. இமாலயத்தில் உள்ள தாவர இனங்கள், விலங்கினங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதில்தான் குரங்கினத்தைப் பற்றி தகவல் கிடைத்தது” என்றார் அறிவியல் ஆராய்ச்சியாளரான மருத்துவர் முகேஷ் தாக்கூர்.  இந்த ஆய்வுக்குழுவினர் அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மக்காவ் குரங்கினத்தையும், சிவப்பு பாண்டாவையும் தேடி வந்திருக்கின்றனர். ஆய்வில் கிடைத்த கழிவு, தோல் மாதிரிகளை ஆய்வகத்தில் டிஎன்ஏ சோதன