இடுகைகள்

டைகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்தம் தெறிக்கும் புல்லட் பறக்கும் ஆக்சன் ! - வார் படம் எப்படி?

படம்
வார் இயக்கம் - சித்தார்த் ஆனந்த் ஒளிப்பதிவு - பெஞ்சமின் ஜாஸ்பர் இசை - விஷால் - சேகர் பின்னணி - பல்காரா சகோதரர்கள் தேசபக்தி படம். ராணுவ உளவுத்துறையில் பணியாற்றும் கபீர். தனது வேலைக்காக தன்னையே தியாகம் செய்யத் தயங்காதாவர். ஆனால் அவரால் இலியாசி, ஹக்கானி எனும் தீவிரவாதிகளை மட்டும் பிடிக்க முடியவில்லை. உள்ளே இருந்து காட்டிக்கொடுக்கும் துரோகிகள் யாரென்று அவருக்கு தெரியவில்லை. அப்போது பார்த்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவரின் மகன் காலித் அவரின் டீமில் சேர வருகிறார். அவரை சேர்த்துக்கொள்ள கபீர் மறுக்கிறார். அதற்கு என்ன காரணம், இருவரும் இணைந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்தார்களா? துரோகி யார்? என்பதைத்தான் படம் பல்வேறு நாடுகளுக்கு பரபரவென சென்ற சேசிங் செய்து சொல்லியிருக்கிறது. தேறியது கட்டுடல் மன்னன் ரோஷன், அதற்கு சளைக்காத டைகர் ஷெரஃப். மற்றபடி பிற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. காதலித்தவன் தன்னை பயன்படுத்திக்கொள்கிறான் என்று தெரிந்தவுடன் வாணி கபூர் சிந்தும் கண்ணீர்த்துளிக்காக அவர் நடிக்கிறார் என்பதை ஏற்கலாம்.  பின்னணியும், பாடல்களும் பரவாயில்லை. சிவசங்கர

சூதாடி டைகரின் சோம்பலான காமிக்ஸ்! - என் பெயர் டைகர்!

படம்
என் பெயர் டைகர் லயன் காமிக்ஸ் ஜீன் கிராட் ரூ.250 1881 ஆம் ஆண்டு நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட டைகர் காமிக்ஸ். இதில் டைகர் பெரும்பாலும் எந்த சண்டைகளிலும் ஈடுபடவில்லை. மொத்த விஷயங்களையும் செய்வது, அபாச்சே ஜெரோனிமா, பிடாரி மா க்ளண்டன், ஸ்ட்ராபீல்டு ஆகிய துணை கதாபாத்திரங்கள்தான். அதிலும் டைகரின் கதை எழுதவரும் கேம்ப்பெல் கூட இருவரைக் கொல்கிறார் என்றால் பாருங்களேன். காமிக்ஸ் படிக்கும்போது, டி.ஆர் படம்போல ஜூனியர் கேரக்டர் எல்லாம் பன்ச் பேசுதே என எண்ணுவீர்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என நினைத்துக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். இதில் பின் யார்தான் நாயகர் என்கிறீர்களா? ஏர்ப் சகோதர ர்கள்தான். டூம்ப்ஸ்டோன் நகர மார்ஷல்களுக்கும், க்ளண்டன் மற்றும் மெக்லெரி குழுக்களுக்கும் நடக்கும் உள்முக, மறைமுக பழிவாங்கல்தான் கதை. இதில் டைகர் தன் காதலியும் பாடகியுமான டோரிக்காக சீட்டுக்கட்டை கடாசிவிட்டு உள்ளே வருகிறார். வில்லன்களை காயம்பட்டாலும் போட்டுத்தள்ளி இறுதியில் சீட்டு விளையாடுகிறார். முக்கியமான பகுதி, கேம்ப்பெல்லுக்கு சொல்லும் தனது வாழ்வு குறித்த பகுதிகள்தான். செவ்வ