இடுகைகள்

புறக்கணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலம் கடந்து அடையாளம் காணப்பட்ட உளவியலாளர் ஸ்கின்னர்!

படம்
  இயற்கையாக ஒருவரின் மரபணுவில் குணங்கள், இயல்புகள், பழக்கங்கள் உள்ளன என அறிவியலாளர் சார்லஸ் டார்வின் கருதினார். அவரின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஸ்கின்னர், இயற்கை, வளர்ப்பு என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலை விலங்குகள் முதல் மனிதர்கள் வரை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல வாழ முடிகிறது. அப்படி வாழ்ந்தால்தான் அந்த விலங்கோ,மனிதரோ தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியும். ஒருவரின் மரபணு, இயற்கையான சுற்றுப்புறசூழல்கள் என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளை வளர்த்தெடுக்கின்றன என்று ஸ்கின்னர் கூறினார். இதைப்பற்றிய கருத்துகளை 1981ஆம் ஆண்டு தி செலக்‌ஷன் பை கான்சீக்குவன்ஸ் என்ற கட்டுரையில் எழுதினார். இந்த கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியானது.  1936ஆம் ஆண்டு, ஸ்கின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையில் இணைந்தார். இந்த முறை எலிகளை கைவிட்டு புறாக்களை நோக்கி நகர்ந்தார். இந்த முறையில் புறாக்கள் வட்ட வடிவில் உள்ள ஒரு பொருளை கடிகாரச் சுற்றினால் உணவு கிட

இந்திய வரலாறு குறிப்பிட்ட நெறிமுறைப்படி எழுதப்பட்டது! - மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர்

படம்
  மிருதுளா முகர்ஜி, வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் மிருதுளா முகர்ஜி வரலாற்று ஆய்வாளர்  மிருதுளா 2012-2014 காலகட்டத்தில் ஜேஎன்யூ சமூக அறிவியல் துறையின் தலைவராக செயல்பட்டார்.  2006 -2011 காலகட்டத்தில் நேரு நினைவு அருங்காட்சியகத்தில் தலைவராக செயல்பட்டார்.  குறிப்பிட்ட முறையில் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால் இங்கு, தகவல்களை மறைக்கிறார்களா? வரலாற்றை நேரடியாக எழுதுவது என்ற அதிகாரப்பூர்வ செயல்பாடு எங்குமே நடைபெற்றது இல்லை.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அவர்களாகவே சுயமாக ஆய்வு செய்து எழுதுகிறார்கள். இந்த வகையில் முதல்தரமான ஆய்வாளர்கள் பாடநூல்களை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். காலனி கால ஆட்சியின் சுவடுகளை தவிர்த்துவிட்டு வரலாற்றை எழுதுவது முக்கியம்.  பிரிவினையை ஏற்படுத்தாத உண்மையான கருத்துகள் என்றால் அவை ஏன் வன்முறையை ஏற்படுத்தும் இயல்பில் உள்ளன? நீங்கள் கூறும் விதமாக எழுதப்படும் வரலாறு அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதுதான். இவை இயல்பான தேடுதலால் எழுதப்படுவதில்லை.  வலது சாரி வரலாற்று ஆய்வாளர்களை வரலாறு ஆய்வுகளை செய்ய அனுமதிப்பது, நூல்களை அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழ

அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் கோஸ்டிங் மனநிலை!

படம்
  திடீரென காணாமல் போகும் காதலி!  கோஸ்டிங் என்பது இப்போதைக்கு டேட்டிங் ஆப்ஸ்களில் அதிகம் நிலவும் ஒரு சூழல் என வைத்துக்கொள்ளலாம்.  ஒருவர் உங்களோடு நன்றாக பழகிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி எண், வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து கணக்குகளிலும் ஒன்றாக இருக்கிறீர்கள். சாட் செய்கிறீர்கள். இன்பாக்ஸில் செய்தி போடுகிறீர்கள். வீக் எண்டில் சந்திக்கிறீர்கள் என இருக்கும் உறவு ஒருநாள் திடீரென மாறுகிறது. எப்படி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நண்பர், தோழி திடீரென அனைத்து தொடர்புகளையும் உங்களுடன் துண்டித்துக்கொள்கிறார். உங்களுக்கு என்னாகும்? என்னாச்சு என பதற்றமாவீர்கள். ஆனால் அவர் அழைப்பு, குறுஞ்செய்தி, சமூக வலைத்தள செய்தி என அனைத்தையும் புறக்கணிக்கிறார். இது மனதளவில் யாரையும் பாதிக்க கூடியது.  இதைத்தான் கோஸ்டிங் என்கிறார்கள். ஒருவர் தான் கொண்டுள்ள உறவை அனைத்து மட்டங்களிலும் துண்டித்துக்கொண்டு கண் பார்வைக்கே படாமல் காணாமல் போவது.  கோஸ்டிங் என்பது உறவுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு குற்றங்களுக்கும் கூட ஆதாரமாக இருக்கலாம் என டேட்டிங் ஆப்கள் நினைக்கின்றன. எனவே, அவை இத

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.  கங

புறக்கணிக்கும் கலாசாரம்! - நமது முதுகெலும்பு உறுதியாக நேராக இருக்கிறதா?

படம்
  புறக்கணிப்பு கலாசாரம் ட்விட்டரில் பெரும்பாலான போராட்டங்கள் புறக்கணிப்போம் என்றே தொடங்கி வருகின்றன. இவற்றை பெரும்பாலும் தேசபக்தி கூட்டம்தான் முன்னெடுக்கிறது. இவற்றில் பெரிய புத்திசாலித்தனம் ஏதும் இருக்காது. கிறுக்குத்தனமாக ஒன்றை புரிந்துகொண்டு உடனே புறக்கணிப்போம், கொடி பிடிப்போம் என ஹேஷ்டேக்கை கட்டைவிரலால் அழுத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை அசலான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும் ஒன்றிய அரசின் ஐடி விங் ஆட்கள் செய்கிறார்கள். அல்லது அப்படி செய்பவர்களுக்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.  இந்தியர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் உறுப்பு, காது. அதில் கேட்கும் செய்திகளை மோசமாக பிறருக்கு சொல்ல பயன்படும் உறுப்பு வாய் என்று கூறுவார்கள். அந்த வகையில் போலிச்செய்திகளுக்கும் வெறுப்பை உண்டாக்கவும் ட்விட்டர் முக்கியமான கருவியாகிவிட்டது.  ஃபேப் இந்தியாவின் விளம்பரம் முன்னர் டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மதமாற்றுத்திருமணத்தைப் பேசிய ஏகத்துவம் என்ற விளம்பரத்திற்கு மனது புண்பட்டுவிட்டது என ஓலங்களை எழுப்பினார்கள். விளம்பரத்திற்காக இந்த கூச்சலா என பதறிப்போன த

சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!

படம்
                  பல்வேறு விழாக்கள் , கலந்துரையாடல் , நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா ? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான் . இது அனைவருக்கும் என்று கூற முடியாது . சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும் . மது அருந்துபவர்கள் , வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும் . இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள் . பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள் . அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும் . ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது . மக்கள் தனியாக வசிக்கிறார்கள் . வாழ்கிறார்கள் . எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது . பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது , நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும் . அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம் . தன்னைப்பற்றிய கவனம் , பதற்றம் இல்லாமல் இருக்

நூல்களை வாசி, மூடத்தனத்தை ஒழி - பார்பரா கிட்டிங்ஸ்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் பார்பரா கிட்டிங்ஸ் 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த மாற்றுப்பாலின ஆர்வலர். இன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகளுக்காக இறக்கும் வரை போராடினார். அமெரிக்க நூலகங்களில் மாற்றுப்பாலினத்தவருக்காக பல்வேறு நூல்களை சேகரித்து நாளிதழ்களில் எழுதி அவர்களுக்காகப் பாடுபட்டார். மாற்றுப்பாலினத்தவரை சிறந்த முறையில் நாவலில் எழுதுபவர்களுக்கு பார்பார கிட்டிங்ஸ் என்ற பெயரில் விருதும் கூட வழங்கப்பட்டு வருகிறது. 1972 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை என்பது மனநல குறைபாடு என்ற கருத்து அமெரிக்க சமூகத்தில் இருந்தது. அதனை நீக்க நிறைய எழுதினார். பேசினார். இவர் அமெரிக்காவில் சமூக செயற்பாட்டாளராக இருந்தாலும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர். அமெரிக்க அரசில் தந்தைக்கு வேலை கிடைக்க, இங்கு இடம்பெயர்ந்து வந்தனர். டெலாவரில் இவருக்கு வீடு அமைந்தது. பள்ளிக்குச் சென்றவருக்கு பெண்தோழிகளின் மீது பெரும் பித்து இருந்தது. இதனால் இவரை ஓரினச்சேர்க்கையாளர் என ஆசிரியே முத்திரை குத்தியதுதான் சோகம். இதனால் ஹானர் சொசைட்டி எனும் அமைப்பில் பார்பரா நிராகரிக்கப்பட்டார். அப்போது ஓரினச்ச

பிறர் என்னைப் பின்பற்றவேண்டும் என ஆசைப்பட்டேன்! - லாவெர்னே காக்ஸ்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! இசைக்குயில் நான் - லாவெர்னே காக்ஸ்  ஆங்கில ஊடகங்களில் அதிகம் தென்படும் புகழ்பெற்ற மாற்றுப்பாலினத்தவர் லாவர்னே. இவரின் சமூக வலைத்தளக் கணக்கு முழுவதும் மாற்றுப்பாலினத்தவராக எப்படி சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தேன் என்பதைப் பற்றிய சிறுசிறு பதிவுகள் உள்ளன.  அவை படிப்பவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. டைம் வார இதழில் இடம் பிடித்த முதல் மாற்றுப்பாலினத்தவர், லாவர்னே காக்ஸ்தான்.  மேலும் டிவியில் ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் எனும் டிவி தொடர் உட்பட பல்வேறு ஊடகத் தொடர்களில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். மேலும் டே டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவரே. மாற்றுப்பாலினத்தவருக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் லாவர்னே நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இவரது தாய் கருப்பினத்தவர்களின் வரலாற்று நூலை வாங்கிப் படிக்க கொடுத்துள்ளார். அதில் அவருக்குப் பிடித்தது, ஓபரா பாடகரான லியோன்டைன் பிரைஸைத்தான். ”எனக்கு அவரின் டர்பன், உதடுகள், பெரிய உதடுகள் என என்னை அவராக கற்பனை செய்துகொண்டு நிக