இடுகைகள்

திருடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ஐடியா ரொம்ப புதுசு . இருந்தா

தற்கொலை செய்துகொண்ட கொலைக்குற்றவாளித் தந்தையை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் மகன்! ஹீலர்

படம்
  ஹீலர் கொரிய டிவி தொடர் ராகுட்டன் விக்கி தொண்ணூறுகளில் அரசுக்கு எதிராக வேன் ஒன்றில் சென்றபடி செய்திகளை ஒலிபரப்பும் புரட்சி பத்திரிகையாளர்களாக இருந்த ஐவர்களில் மூவர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். இருவர் இறந்துவிடுகிறார்கள். அதிலும் ஒருவர், அவரது ஆருயிர் நண்பராலேயே கொலை செய்யப்பட்டார் என காவல்துறை குற்றம் சாட்டுகிறது. அந்த குற்றச்சாட்டு விலக்கப்படுவதற்கு முன்னரே, குற்றம் சாட்டப்பட்ட நண்பர் ஜியோன் சிக் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரிவதில்லை. நண்பரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒ ஜில் என்பவரின் மனைவி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் உள்ள கிம் மூன் சிக் என்பவரை மணந்துகொள்கிறார். அவளுக்கும் கொல்லப்பட்ட ஓ ஜில் என்பவருக்கும் பிறந்த பெண் குழந்தை, கிம் மூன் சிக் காரில் கூட்டிவரும்போது திடீரென   தொலைந்துபோகிறது. கிம் மூன் சிக், குப்பைக்கிடங்கு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால், அவரது ஆருயிர் நண்பர்கள் இறந்தபிறகு கொரியாவில் மகத்தான அரசியல் சக்தியாக, ஊடக தொழிலதிபராக மாறுகிறார். இது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படு

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கி

உடன்பிறவாத தம்பி சாகரின் குடும்பத்திற்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் திருடன் பிரபு! பலேவாடி பாசு - பாலைய்யா, ஷில்பா, அஞ்சலா

படம்
பலேவாடி பாசு பாலகிருஷ்ணா, ஷில்பா ஷெட்டி, அஞ்சலா ஜாவேரி இயக்கம் - பி.ஏ. அருண் பிரசாத் இசை - மணி சர்மா காட்டிலாகா அதிகாரியாக சாகர் அவர் வண்டி ஓட்டுநர் புதிதாக வந்து சேர்கிறார்கள். பழங்குடி மக்களுக்கு பல்வேறு குடியிருப்புகள், கல்வி, கணினி, டிவி வசதிகளை செய்து தருகிறார் சாகர். இதனால் மக்கள் அவரை வாழும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அங்கு சுனிதா என்ற இளம்பெண் வருகிறார். அவர் சாகர் என்ற பெயரில் அங்கு வேலையில் இருப்பவர், மோசடிக்காரர் என குற்றம்சாட்டுகிறார். அப்போதுதான் சாகர் என்பவர் யார் என அனைவரும் அறிகிறார்கள். உண்மையில் சாகர் என்ற பெயரில் அங்கு வேலை செய்பவர் யார் என்பதை பழங்குடி மக்களோடு நாமும் அறிவதுதான் கதை.  பாலைய்யாவின் குறையாத எனர்ஜிதான் படத்தைப் பார்க்க வைக்கிறது. படத்தில் பழங்குடி பெண்ணாக பிரிட்டிஷ் பெண் அஞ்சலாவை, லக்மே லிப்ஸ்டிக் கூட கலைக்காமல் ஜிலு ஜிலு உடை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது? அவர் இல்லையென்றால் படத்தில் பாடல்களை எப்படி வைப்பது? லாஜிக் தானே? நிறைய லாஜிக் பார்த்தால் மேஜிக் மிஸ் ஆகிவிடும்.  படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உண்டு. யானைகளின

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்

இரண்டும் ஒன்றுதானா டக்ளஸ் அண்ணே!

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் இரண்டும் ஒன்றுதான் குடிகாரன் வெளியே உளறுகிறான் மற்றவர்கள் அதைத்தான் மனசுக்குள் நினைக்கிறார்கள்.  இடறு எங்கே விழுந்தாய்  என்று பார்க்காதே  எங்கே இடறியது என்று பார். யார் குற்றவாளி? ஏணிமேல் ஏறுகிறவன் மட்டும்  திருடனல்ல;  கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் திருடன்தான்.  சின்ன தாமதம் உண்டா? தாமதத்தில் சிறிய தாமதம்  பெரிய தாமதம் என்று வித்தியாசம்  எதுவும் இல்லை.  யாரை நம்புவது?  எல்லோரையும் நேசியுங்கள். ஆனால் உங்களை மட்டுமே நம்புங்கள்.  சத்தமின்றி! மௌனமும் ஒருவகை விமர்சனமே! நன்றி: ஆனந்தவிகடன்