பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

 




மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்..


இதுதான் ராஜாவின் மாஸ்க்..

சுபலேகா பாடல்... 







கொண்டவீட்டி தொங்கா


இயக்கம் கோதண்டராமி ரெட்டி


கதை வசனம் பாருச்சி சகோதரர்கள்


பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி. 


படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம். 

 

ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான். 


ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய, ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து தன் தந்தையுடன் பழங்குடி மக்களுக்கென அங்கேயே தங்கியிருக்கும் ராஜா மட்டும்தான் பேண்ட், சட்டையும் காட்டுக்குள் வினோதமாக திரிகிறார். பழங்குடி மக்களின் நலனுக்காக அவர்தான் ஆதாரங்களைக் கூட திரட்டாமல் வக்கீல் என்று சொல்லி நீதிமன்றம் செல்கிறார். அங்கு தோற்றுப்போனவுடன்தான் கௌபாய் தோற்றத்திற்கு மாறுகிறார். 


வெளியூரிலிருந்து வரும் டாக்டர் கன்யா கூட யார் தொங்கா என்று அட்டைப்பொட்டு வைத்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதுகூட அவசியமில்லை. முகத்தை சல்லடை போன்ற துணியால்தான் ராஜா மறைத்திருக்கிறார். ஆனால் அவரையே சுற்றி வரும் நாடோடிப் பெண்ணான இன்ஸ்பெக்டர் லதாவுக்கு ராஜாவும், தொங்காவுக்கும் வேறுபாடு தெரிகிறதாம். ராதா, அரசு மருத்துவராக இருக்கிறார். காட்டுக்கு ஆய்வுக்கு செய்ய வரும்போது வெங்காயச்சருகு போன்ற உடை அணிகிறார். சரி மற்ற சமாச்சாரங்களுக்கு எளிதாக இருக்கும். ஐந்து நிமிடங்களில் கழற்றும் உடைதான் அது. அப்படி இப்படி இருந்தாலும் அவர் புத்திசாலி. ஆனால் மாறுவேடம் போட்டு கிராமத்தில் திரிந்தாலும், விதிகளை முக்கியம் என நம்பும் விஜயசாந்தி அடி முட்டாளாக இருக்கிறார். இவரின் புத்திசாலித்தனத்திற்கு காவல்நிலையத்தில் ஒருவரைக் கூட்டி வந்து மதுபானம் கொடுத்து விசாரிக்கும் காட்சியே சான்று. 


வயிற்றில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து அறுவை சிகிச்சை முடிந்த நிலையில்தான் ரயிலில் அம்ரிஸ் பூரியோடு சண்டை வேறு வருகிறது. இந்த படத்தில் அம்ரிஸ் பூரி மாதிரியான நடிகர் எதற்கு என தெரியவில்லை. படத்தை பெரும்பங்கு காப்பாற்றியவர் இளையராஜா என்றால் மிகையில்லை. இவரது பாடல்களை இன்று தமன், சாய் கார்த்திக் ஆகியோர் ரீமிக்ஸ் செய்யுமளவு தரமாக ரசிக்கப்படும் வகையில் உள்ளன. 


மாறுவேட போட்டி


கோமாளிமேடை டீம் 



கருத்துகள்