காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

 

 

 

 

 Free illustrations of Non-violence

 

 

காந்தியின் அகிம்சை, சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார். அதுதான், நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை. காந்தி, வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர். சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார். அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார். பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை. அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார். அவை அனைத்துமே எளிமையான உணவுதான்.


கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார். இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது.. உடனே அதை நிறுத்திவிட்டார். ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை. எனவே, வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் தொடங்கினார். ஆனால் பசுவின் பாலைப்போல பாதாம் பால் காந்திக்கு நிறைவைத் தரவில்லை.


கார்வர், தொடர்ச்சியாக உணவு பற்றி காந்தியிடம் கடிதம் வழியாக உரையாடிக்கொண்டே இருந்தார். காந்தியும் தனது உடலை சரியானபடி பராமரிக்கும் உணவுமுறையை வெகு ஆண்டுகளாக தேடினார். பிறகு அப்படி ஒரு உணவு முறை கிடையாது என்ற உண்மையை அடையாளம் கண்டார்.


பெரும்பாலும் சைவ உணவை இந்தியாவில் சாப்பிட்டவர், வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுத்தபோது அம்மா அவரிடம் மது, மாது, மாமிசம் என எதையும் தொடக்கூடாது என சத்தியம் வாங்கிக்கொண்டார். அதை காந்தி லண்டன் சைவ உணவு சங்கத்தில் சேர்ந்து காப்பாற்றினார். உணவு என்பதற்கும் மனநிலைக்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். எனவே, அதில் தனது பேச்சு, எழுத்து, செயல்பாடு, போராட்டங்கள் இவற்றோடு அதற்கும் நேரம் ஒதுக்கினார். பிரிட்டிஷார் மாமிசம் உண்பதால்தான் அவர்கள் இந்தியாவை அடக்கி ஆட்சி நடத்துகிறார்கள் என காந்தி நம்பினார். மேலும் பிற உயிர்களைக் கொல்லாமை என்ற ஆன்மிக தத்துவ ரீதியிலும் அவர் யோசித்தார். இதன்படிதான் பசுவின் பாலை அருந்துவதை மெல்ல கைவிட்டார்.


அன்றைய காலத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ரொட்டி,யை உப்பில் தொட்டு சாப்பிடும் நிலைதான் இருந்தது. அந்தளவுக்கு பிரிட்டிஷார் போட்ட வரியின் விளைவுகள் இருந்தன. நாட்டின் வளத்தை மெல்ல சுரண்டிக் கொழுத்தனர். இந்தியா பஞ்சத்தால் சுருங்கிக்கொண்டிருக்க கப்பலில் சென்ற இந்திய செல்வங்கள் இங்கிலாந்தை வளப்படுத்தின. எளிமையான உணவு உண்பது, அது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கவனிப்பது, உண்ணாநோன்பு இருப்பது என காந்தி செய்த பல்வேறு பரிசோதனைகளை அவரின் கருத்தொருமித்த காங்கிரஸ் தலைவர்களே கூட ஏற்பது கடினம். காந்தி தனது மலத்தைக் கூட கவனித்துப் பார்ப்பார் என்று ஒரு கருத்து கூறப்பட்டது. அவரின் ஆடம்பரமற்ற எளிய உணவும், நடைப்பயிற்சியும் அவரை உறுதியானவராக மாற்றியது. அரையாடை பக்கிரி என இங்கிலாந்து ஊடகங்கள் கேலி பேசினாலும் கூட அந்நாட்டு மக்களின் மனசாட்சியோடு நேரடியாக அவரது தோற்றமே உரையாடியது. தனது தரப்பிற்கு வாதாட முடியாமல் பதற்றத்தில் மயங்கி விழுந்தவரின் உறுதியான பேச்சு ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக மாறியது வரலாறுதானே?





 

கருத்துகள்