ஏழைகளுக்கு வழங்கிய கோவில் தான நிலத்தை அபகரிக்க நினைக்கும் பணக்கார கூட்டம் - அல்லுடு மஜாக்கா - சிரஞ்சீவி

 


















அல்லுடா மஜாகா


சிரஞ்சீவி, ரம்பா, ரம்யா கிருஷ்ணன்


கிராமத்தில் உள்ள கோயில் நிலங்களை தேட்டை போட முயலும் பெரும் பணக்காரர்களுக்கு இடையில் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகள் மாட்டிக்கொள்கிறாள். அவளது வாழ்க்கையைக் காப்பாற்றி, மணம் செய்துவைக்க அண்ணன் திட்டமிடுகிறான். அவனது முயற்சி சாத்தியமானதா என்பதே கதை. 


படத்தின் கதைதான் சீரியசாக இருக்கும். ஆனால் காட்சிகள் எதிலும் எந்த சீரியஸ் தனமும் இருக்காது. படத்தில் சண்டைக்காட்சி நடைபெற்று முடிந்ததும், வில்லனின் ஆள் இப்போதே ஹீரோவைக் கொன்னுட்டா அப்புறம் கதையில் என்ன சுவாரசியம் இருக்கும் என்கிறார். இறுதிக்காட்சியில் அடிபட்டு உதைபடும் நாயகனின் தங்கையை மணக்கும் மாப்பிள்ளை கேமராவைப் பார்த்து இன்னும் நாயகனின் சாந்தி முகூர்த்தம் இருக்கு.. அதையும் பாருங்க என்கிறார். இறுதிக்காட்சியில் மட்டும்தான் சிரஞ்சீவி தன்னை மணக்க கொழுந்தியாளும் தயாராக இருப்பதைப் பார்த்து மிரண்டு என்ன செய்ய என்று கேமராவைப் பார்த்து பேசுகிறார். முடியலடா சாமி. 


படத்தில் தொடக்க காட்சிகள் மட்டுமே சற்று ஆறுதலாக இருக்கின்றன. படத்தில் லட்சுமியின் மகள்கள் ரம்பா, ரம்யா கி வந்தபிறகு படம் எந்த திசையில் போகிறது என இயக்குநருக்கே தெரியவில்லை. நீங்கள் நடிப்பதை நடியுங்கள் நான் எடிட்டிங்கில் பார்த்துக்கொள்வேன் என்று நம்பிக்கை அளித்திருப்பார் போல.


அதிலும் சிரஞ்சீவியின் தங்கையாக ஒரு பெண் வரும்போதே பீதியானது. இந்த பெண்ணை வயிற்றில் கடப்பாரை செருகி கொல்வார்களோ என்று.. ஆனால் படத்தில் அதற்கும் மேல் அவரை அடித்து உதைத்து தள்ளி, இழுத்து என பலாத்காரமோ என நினைக்கும்படி மைதாமாவு போல பிசைந்துவிட்டார்கள். இரண்டாம் பகுதியாக வருபவை அனைத்துமே அவர் சம்பந்தப்பட்டவைதான். இதில் டொயோட்டா, டகோட்டா என கோபப்படுத்தும் காமெடி வேறு. அதிலும் குறிப்பாக பெண் வேடம் போட்ட பிரம்மானந்தம் மீது கோட்டா சீனிவாசராவ் பாய்ந்து பலாத்காரம் பிளஸ் வல்லுறவு என காம்போவாக செய்ய நினைப்பார். அதற்காக அவரை கைது செய்து லாக்கப்பில் அடைத்து மிரட்டுவார்கள் பாருங்கள். கொடூரம். சிரஞ்சீவி யின் படமல்ல. அவர் ஏற்படுத்திய பயம். 


கோட்டா சீனிவாசராவின் பி.ஏ ஒருவர் வருவார். அவரின் வசன காமெடிதான் சற்றே ஆறுதலாக இருக்கிறது. படத்தின் இடையே மெகாஸ்டார். அவருக்கு யார் ஜோடியாக இருந்தாலும் சூப்பராக இருக்கும் என சிரஞ்சீவின் மாமனாரே பேசும் வசனம் எல்லாம் வேற லெவல். 


படத்தில் உருப்படியான திருப்பம். போலீஸ் கைதியாக இருக்கும் சிரஞ்சீவி, பப்பி எனும் ரம்யா கிருஷ்ணனுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டுவதுதான். அப்போது வரும் சேசிங், குதிரையோடு லாரிக்கு கீழே சறுக்கி வருவது பார்த்ததும் படம் பார்ப்பவர்கள் எஸ்கேப்பானால் சிராய்ப்போடு தப்பிக்கலாம். இல்லையெனில் டிராக்கடர் வயல் காட்டில் பறக்கும் சண்டைக் காட்சியையெல்லாம் பார்த்து தொலைத்து மிரள வேண்டியிருக்கும். கல்யாணம் ஆகும் முன்னர் பிகினி, மாடர்ன் டிரஸ் அணியும் பப்பி சகோதரிகள் பிறகு அடியோடு மாறுவது மிரட்டல், அதாவது ரம்யா கிருஷ்ணன், தாலி கட்டியபிறகு புடவை மட்டுமே கட்டுவார். இல்லோடா என பாசமாய் சிரஞ்சீவியை அழைப்பார்.  


அந்த கால படங்களைப் பொறுத்தவரை படத்தின் காட்சியில் வரும் பெண் நாயகனை காதல் பிளஸ் காம வேட்கையோடு ஒரு பார்வை பார்த்தாலே போதும்.உடனே கனவுப்பாட்டு போட்டு அந்தப் பெண்ணோடு ஒரு குத்துப்பாட்டு பாடிவிட வேண்டும். இது ஒரு சடங்கு. இதில் தன் மாமியார் லட்சுமியைக் கூட மாமியார் என்றும் பாராமல் செட்டுக்குள் இழுத்துப்போட்டு டான்ஸ் ஆடியிருக்கிறார் மெகாஸ்டார். கொடுமை. இதெல்லாம் பார்த்துவிட்டு வந்தால் இறுதிக்காட்சி சாந்தி முகூர்த்தம் எல்லாம் ஒரு விஷயமாடா என்று சொல்லுவீர்கள்.காள மாடு ஒண்ணு, கறவ மாடு ரெண்டு என போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். 


சிரஞ்சீவி பாட்டு, சண்டை  என எப்போதும் போல உழைப்பைக் கொட்டியிருக்கிறார். ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. அத்தனையும் வீண். 


மரணபயத்தை மெகாஸ்டார் காட்டியுள்ள படம்


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்