வணிகராக சிறந்த பழக்கங்களை கற்றுக்கொள்ள சொல்லித்தரும் அற்புதமான குறுங்கதை நூல் - உங்களுக்குள் உள்ள விலையில்லா ஆற்றல்

 


உங்களுக்குள்ள விலையில்லாத ஆற்றல் 
மாக் ஆண்டினோ
நாகலட்சுமி சண்முகம் 
மிஸ்டிக் ரைட் இந்த நூல் ஒரு சுய முன்னேற்ற நூல். ஆனால் நாவல் போன்ற மொழி வடிவம் கொண்டது. இதனால் நூலை படிக்கும்போது கட்டுரைகளைப் படிக்கிறோம். அதில் நிறைய மாறுங்கள், மாற்றுங்கள் என்பது போன்ற அறிவுறுத்தல்களை பார்க்கும் சங்கடம் நேராது. 


நூலில், தனது இறுதிக்காலத்தை எட்டும் வயதான வணிகர் இருக்கிறார். அவர், உலகிலேயே பெரிய பணக்கார வணிகர் என்ற பெருமையை எட்டிவிட்ட நிலை. அந்த நிலையில் அவர் தான் இதுவரை சேர்த்த பணத்தை தன்னோடு வியாபாரம் செய்தவர்கள், ஏழைகள் என பலருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இது அவரின் நண்பராக தொழிலை கவனித்து வரும் மேலாளருக்கு கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அதிர்ச்சியும் திகைப்புமாக ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று சொல்லும்போது, தான் இறக்கப்போகிற காலகட்டம் வந்துவிட்டது. இந்த தொழிலை தொடங்கும்போது நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி தான் பணத்தை மக்களுக்கு பகிர்ந்துகொண்டேன். நான் இறந்தபிறகு இதுவரை வசித்த இந்த மாளிகையை எனது உண்மையான நண்பரும், மேலாளருமான உனக்கு வழங்குகிறேன் என பணக்கார வணிகர் சொல்லுகிறார். 


ஏன் தனது சொத்தை பிறருக்கு பகிர்ந்துகொடுத்தார் அந்த வணிகர் என்பதே நூலின் முக்கியமான கரு. மாக் ஆண்டினோ நூலை பிரமாதமாக எழுதியிருக்கிறார். நூலை வாசிக்க வாசிக்க வணிகம் என்பது எப்படியானது. அதனை செய்பவர் கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் ஆகியவற்றை படிக்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. பிற நூல்களிலிருந்து இந்த நூல் மாறுபடுவது வணிகத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதோடு, சமூகத்தைப் பற்றியும் கருத்தில் கொள்வதை முக்கியப்படுத்துகிறது. 


இயேசு பிறப்பதைப் பற்றி கூறுவதோடு தொடங்கும் வணிக குறுங்கதை, அவர் இறந்துபோய் தனது சிவப்பு அங்கியை பழம்பெரும் வணிகருக்கு வழங்கிவிடுவதோடு கதை நிறைவடைகிறது. அப்போது ஏறத்தாழ அந்த வணிகரின் மனம் கொள்ளும் நிறைவான தன்னிறைவை நமது மனமும் அனுபவிக்கிறது. அதுதான் இந்த நூலின் வெற்றிக்கு காரணம் என கூறலாம். 


இன்று வணிகம் தடம்புரண்டு நெறிகள் காணாமல் போய்விட்ட சூழலில், பழமையான வணிகர் உலகில் பெரிய வணிகனாக உருவாக வாய்ப்பு கேட்கிறார். அப்படி கிடைத்த வாய்ப்பில் கூட தனது கம்பளி ஒன்றை கடுங்குளிரில் தவிக்கும் நாடோடி தம்பதியின் குழந்தைக்கு கொடுத்துவிடுகிறார். பிறரின் நலனுக்காக தனது நலனை, எதிர்காலத்தை தியாகம் செய்யும் மனநிலையை அவர் இளம் வயதில் கொண்டிருக்கிறார். ஆனால் தான் ஏதோ செய்தோம் என்று தோன்றுகிறது. அந்த நேர மன இளகல் என புரிந்துகொள்கிறார். ஆனால் அவர் செய்த செயல் பற்றி, அவரது முதலாளி புரிந்துகொள்கிறார். அதற்குப் பிறகுதான் குறுங்கதை நூல் படிப்பதற்கு மேலும் ஆழமான பொருள் கொண்டதாகிறது. 


வணிக வீதி 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை