பிளாக் ஸ்பிரிட் ஆன்மாவை சாமுராயாக மாறி அடக்கும் ஸ்கூபி டூ! - அனிமேஷன்

 ஸ்கூபி டூ அண்ட் தி சாமுராய் ஸ்வோர்ட் (2009)
ஹன்னா பார்பரா புரடக்‌ஷன் 
வார்னர் பிரதர்ஸ் 

ஸ்கூபி டூ டீமை அப்படியே ஜப்பானுக்கு தூக்கிச் செல்கிறார்கள். கதை அங்குதான் நடைபெறுகிறது. அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றில், தொன்மையான பிளாக் ஸ்பிரிட் என்ற உருவம் பாதுகாப்பு கவசத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திடீரென அந்த உருவம் அங்கிருந்து சக்திபெற்று கண்ணாடி பாதுகாப்புகளை உடைத்துக்கொண்டு தப்பி செல்கிறது. 


சாமுராய் ஒருவரின் ஆன்மாவை பிரதிஷ்டை செய்த வாளைக் கொண்டுள்ள பிளாக் ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் உலகிற்கு ஆபத்து ஏற்படும். வேறு வழியில்லை என்பதால், பேய்களின் மர்மங்களை மோட்டார் வேனில் வந்து கோமாளித்தனங்களை செய்து கண்டுபிடிக்கும் ஐந்துபேர் கொண்ட உறுப்பினர்களான ஸ்கூபி டூ டீமின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் ஜப்பானுக்கு வந்து ஜப்பானிய பின்னணி இசையுடன் சாமுராய் ரோபோட்டுகளுடன் சண்டை போட்டு, புத்திசாலித்தனமாக திட்டங்களைப் போட்டு அருங்காட்சியக திருட்டுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. 


ஃபிரெட், டெப்னே, வெல்மா, சேஜி, ஸ்கூபி டூ ஆகியோர் பொதுவாக என்ன செய்வார்கள்? நடக்கும் அமானுஷ்யத்தை ஆராய்ந்து அதை உருவாக்கிய மனிதர்களின் பித்தலாட்டத்தை ஊருக்கு சொல்லுவார்கள். பிறகு அந்த ஊர் தந்தியில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகும். இதுதான் ஸ்கூபி டூவின் மாறாத டெம்பிளேட். 


ஜப்பானில் இது சற்றே மாறியுள்ளது. அதாவது, உண்மையாக உள்ள தாந்த்ரீக முறையில் இவர்களும் பங்குகொண்டு எதிரிகளை வீழ்த்துகிறார்கள். உலகை ஆளும் ஆசை கொண்ட தற்காப்புக்கலை கற்றுத்தரும் பெண் குருவை தோற்கடித்து வீழ்த்துகிறார்கள். அனிமேஷன் நெடுக அதற்கு உழைத்துள்ளவர்களின் உழைப்பு தெரிகிறது. தொன்மையான கதையை நாம் ஏற்றுக்கொள்ள இசை, பாடல்கள், தற்காப்புக் கலை உடல் மொழி என பிரமாதப்படுத்துகிறார்கள். 


இறுதிக் காட்சியில் கதை நாயகனான ஸ்கூபி, சாமுராய் முறையில் பற்றுதல் கொண்டு மனதை வெறுமையாக்கிக் கொண்டு அநீதியை ஒரே வாள்வீச்சில் முடிவுக்கு கொண்டு வருகிறது. அந்த காட்சி பிரமாதமாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் சக்தி வாய்ந்த வாள்கள் இரண்டு, ஒன்று விதி வாள், இன்னொன்று பேரழிவு வாள். இதில் பேரழிவு வாள், கருப்பு ஆன்மா எனும் தீய சக்தியிடம் இருக்கிறது. விதியின் வாள், பச்சை டிராகனிடம் இருக்கிறது. டிராகன்தான் முன்னோரு காலத்தில் கருப்பு ஆன்மாவை இரு வாள் கொண்டு அடக்கி ஒடுக்குகிறது. அடுத்து, மீண்டும் கருப்பு ஆன்மா பௌர்ணமி நாளன்று சக்தி பெற, அதை ஒடுக்க டிராகன் முதுகில் சேஜி, ஸ்கூபி டூ பயணித்து வருகிறார்கள். இவர்கள் முதிய சாமுராய் ஒருவரைச் சந்தித்து பச்சை டிராகனை சந்திக்கச்செல்லும் காட்சிகள் பிரமாதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை அனிமேஷன் படமாக நீங்கள் பார்க்கும்போது அதன் அழகை கண்களாலும் மனதாலும் உணர்வீர்கள். 


படத்தின் இறுதியில் உலகை காப்பாற்றிய ஸ்கூபி டூவுக்கு அருங்காட்சியகத்தில் ஒரு சிலையை வைக்கிறார்கள். ஸ்கூபி டூவுக்கு ஜப்பானிய இளம் பெண்கள் முத்தம் கொடுத்து,அதை வெட்கப்படவைத்து செல்ஃபீ எடுக்க படம் கொண்டாட்டமாக நிறைவு பெறுகிறது. 


தூய ஆன்மா - தீய ஆன்மா அதிகாரச் சண்டை


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை