டைம் 100 - சாதித்த மனிதர்கள் - பார்க்கர், சோனியா, கிரிகோரி, பன்செல்

 


சோனியா

கிரிகோரி 

பார்க்கர்

பன்செல்


கான்டாஸ் பார்க்கர் 


விழிப்புணர்வோடு இயங்கும் விளையாட்டு வீரர்


கான்டாஸ் பார்க்கர் கதை அடுத்த தலைமுறை வீரர்களை பெரும் உற்சாகப்படுத்தக்கூடியது. அவர் இரண்டாவது முறையாக டபிள்யூ என்பிஏ சாம்பியன்ஷிப்பை வென்றது மறக்க முடியாத தருணம். இதனை அவர் சிகாகோ ஸ்கை என்ற அணியில் இடம்பெற்று சாதித்தார். தான் விளையாடிய விளையாட்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் எனலாம். நான் அவரது சக விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரின் ஆற்றலை உணர்ந்துள்ளேன். அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். அவர் தான் விளையாடும் இடங்களுக்கு தன் மகளைக் கூட்டிச்செல்வார். 


பாலின சமத்துவம் பற்றி வெளியாகியிருக்கும் டைட்டில் 9 என்ற ஆவணப்படத்தையும் கான்டாஸ் தயாரித்திருக்கிறார். தனது செயல்பாடுகள் மூலமாக தொடர்ந்து அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். தனது வாழ்க்கையை வெளிப்படையாக முன்வைப்பது எளிதானதல்ல. 


டிவைன் வேட் 


2


சோனியா குவாஜாஜாரா sonia guajajara


அமேஸானின் பாதுகாவலர் 


சோனியாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள். எனவே சோனியா தனது பத்தாவது வயதில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறினார். புள்ளியியலில் பட்டம் பெற்றார். 500 ஆண்டுகள் பழமையான சோனியாவின் பழங்குடி இனத்தை அழிக்க பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றன. அவர் அந்த முயற்சிகளை எதிர்கொண்டு போராடி வருகிறார். 


ஆண்மைய சமூகத்திற்கு இடையில் உரிமைக்கு போராடும் பெண் போராளியாக சோனியா உள்ளார். பழங்குடிகளை அழிக்கும் அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் முக்கியமான உரத்தகுரல். நவ தாராளமயவாதத்தின் பாதிப்புகளைப் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். பிரேசில் நாட்டில் வலதுசாரி தலைவரான பொல்சனாரோ பழங்குடிகளின் நிலத்தை ஆக்கிரமித்து அழித்து வருகிறார். அதை எதிர்க்கும் முக்கியமான போராளி சோனியாதான். காப் 26இல் பங்கேற்றவர் பழங்குடிகளை பாதுகாக்கவென 1.7 பில்லியன் நிதித்தொகையை உருவாக்க முயன்றார். பல்வேறு போராட்டங்களை மக்களை திரட்டி நடத்தியதால் பழங்குடி மக்களின் நிலத்தை கையகப்படுத்தும் பிரேசில் அரசின் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்திலும் பழங்குடிகளை பாதுகாக்கும் முயற்சிகளை சோனியா நிறுத்திவிடவில்லை. அதுவே உலகின் கவனம் அவரின் மீது திரும்ப முக்கியமான காரணம். இவர், எனக்கு மட்டுமல்ல. பிரேசில் நாட்டில் பல லட்சம் குடிமக்களுக்கும் ஆதர்சமாக இருக்கிறார். நாடு தன் கடன்களை கட்டி எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பதை இவர்கள் பலரும் எதிர்நோக்கி கனவு கண்டு வருகிறார்கள். 


குய்ஹெர்மெ பௌலோஸ் 


3


கிரிகோரி எல் ராபின்சன் gregory l robinson


விண்ணை நோக்கிய லட்சியம் 


என்னுடைய சக விஞ்ஞானிகளைப் போலவே நானும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப பற்றி கனவு கண்டேன். அதை சாத்தியப்படுத்தும் திட்ட இயக்குநர் தான் கிரிகோரி எல் ராபின்சன். 1995ஆம் ஆண்டிலிருந்து நான் ஜேம்ஸ் வெப் விண்வெளி அதிசயத்தைப் பற்றி கனவு கண்டு வருகிறேன். இது முக்கியமான விண்வெளி திட்டம் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். 


வெப், தொலைநோக்கியை உருவாக்க நாங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கனவு கண்டிருக்கிறோம். கிரிகோரி நாசாவில் எங்கள் திட்ட இயக்குநராக பணிபுரிந்தார். அறிவியல் மாயத்தை சாத்தியப்படுத்தியதில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு. நாங்கள் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்லி திட்டநோக்கத்தை தெளிவாக புரிந்துகொள்ள கிரிகோரி, மரியாதைக்குரியர். 


ஜான் மாதெர் 


4


ஸ்டெபனே பன்செல் stephane bancel


2020ஆம் ஆண்டு மாடர்னா நிறுவனம், குறிப்பிட்ட காலக்கெடுவில் தடுப்பூசியை உருவாக்கி சாதனை செய்தது.சிறிய மருந்து நிறுவனமாக இருந்த மாடர்னாவை இன்று முதலீடுகளை பெற்று பெரு நிறுவனமானக மாற்றிருக்கிறார் பன்செல். அவரது வழிகாட்டுதலில் நிறுவனம் என்ஆர்என்ஏ தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இவரது வணிக முறைகள் எப்போதும் சரியானவை என்று கூற முடியாது. பல்வேறு முறைகளில் சர்ச்சையும் ஆகியுள்ளது. இந்த நிறுவனம் தனது கண்டுபிடிப்பை ஏழை நாடுகளுக்கும் பகிர்ந்துள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உதவியுள்ளது. மாடர்னா நிறுவனம் கோவிட் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றது. 21 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் தனது கண்டுபிடிப்பு மூலம் தன்னைக் காத்துக்கொண்டுள்ளது.  கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

பயணிகள் பேருந்தில் பாலச்சந்திரனோடு ஒரு பயணம்