கொலைப்பழியிலிருந்து தொழிலதிபரை மீட்கும் ஆட்டோ டிரைவர் ஜானி! - ரௌடி அல்லுடு - சிரஞ்சீவி, திவ்யா பாரதி, சோபனா

 


















ரௌடி அல்லுடு
சிரஞ்சீவி, திவ்யா பாரதி, ஷோபனா

Director - Ragavendra rao

Music - bappi lahiri

ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர் கல்யாண். இவரது அப்பா தொழிலைத் தொடங்கி நடத்துகிறார். ஆனால் அவருடன் தொழில் கூட்டாளியாக சேரும் ஆட்களை நிறுவனத்தை  கைப்பற்றி கல்யாணை கொலைப்பழியில் சிறைக்கு அனுப்புகிறார்கள். அந்த பழியில் இருந்து கல்யாண் எப்படி தப்புகிறார், வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை. 


படத்தில் கல்யாண் பாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லை. ஒரே ஒரு சண்டைக்காட்சி, சோபனாவுடன் பாடல் மட்டும் பாடுகிறார். மீதி அனைத்து விஷயங்களையும் ரௌடி அல்லுடுவான பாம்பே ஆட்டோ டிரைவர் ஜானி  பார்த்துக்கொள்கிறார். 


படம் முழுக்க ஆட்டோ டிரைவரான ஜானி தான் பீடியைக் குடித்தபடி நம்மை காட்சிகளை ரசிக்கும்படி செய்கிறார். படம் சி சென்டருக்கானது. இதில் ஏ கிளாஸ் பாத்திரம் தான் கல்யாண். அவருக்கும் நாயகி சோபனாவுக்குமான இடம் படத்தில் மிக குறைவு. எண்பது சதவீதம் ஜானிக்கும் அவரது காதலியான ரேகாவுக்குமான காட்சிகளும் பாடல்களும்தான் அதிரடிக்கின்றன. 


கல்யாண் தவறான கொலைக்குற்றத்தில் சிக்கிக்கொள்ள அதைப் பார்த்து அவரை மீட்க ஜானி மும்பையிலிருந்து ஆந்திராவுக்கு வந்து பாக்ஸ் பத்தலாகி போகும் வரையில் எப்படி வில்லன்களை அடித்து உதைத்து உண்மையை சொல்ல வைக்கிறார் என்பதே இறுதிக்காட்சி. 


படத்தில் காமெடி சிறப்பாக உள்ள அளவுக்கு சண்டைக் காட்சிகள் உருவாக்கப்படவில்லை. இறுதிக்காட்சிக்கு முன்னர்தான். பைக்கில் வரும் ஜானியை லாரியில் மோதி அவரை சாலையில் தள்ளி வயிற்றில் கத்தியால் குத்தி, மரக்கட்டைகளை வைத்து நையப்புடைக்கிறார். அதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டு உடனே தனது மாமனாரை மீட்க எப்படி செல்கிறார் என்பது புரியவில்லை. 


தோற்றம் ஒன்றாக இருந்தாலும்  ஒருவர் பேசும் மொழி, உடல் மொழி கூடவா அவரோடு வேலை செய்பவர்களுக்குத் தெரியாது? தோற்ற மாறுபாடு வைத்து ஏமாற்றும் கதை பெரிதாக நமக்கு உற்சாகம் தரவில்லை. ரேகாவாக நடித்துள்ள திவ்ய பாரதி காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறார். படத்தில் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் கிடையாது. ஆடவும் பாடவும் மட்டுமே இடம் உள்ளது. அதை அவர் பயன்படுத்திக்கொள்கிறார். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்