இடுகைகள்

காமிக்ஸ் - டைலன் டாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெகிழ்ச்சியான டைலன் டாக் கதை - படிக்க மறக்காதீர்

படம்
டைலன் டாக் தேடும் வாராதோ ஓர் விடியலே? காமிக்ஸில் அனைவரும் எதிர்பார்ப்பது என்ன? அதிரடியான ஒரு கதை. திகட்ட திகட்ட காதல். சூப்பர் க்ளைமேக்ஸில் சுபமான முடிவு. ஆனால் இக்கதையில் வெகுஜன காமிக்ஸில் எந்த விஷயமும் கிடையாது. எனவே ஹீரோ அடிவாங்க கூடாது, பணத்திற்கு கஷ்டப்படக்கூடாது, புனிதமான வர்ஜின் பெண்ணை காதலிக்கவேண்டும், எப்பாடு பட்டாலும் நினைத்த ஒருவரை காப்பாற்றி விடவேண்டும் என நினைத்துக்கொண்டு கதையை படித்தால் ஏமாந்து போவீர்கள். ஜானி என்ற கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிக்கு சாப்பாடு போடப்படுகிறது. அதனை சாப்பிடும்போதே திடீரென அறை தீப்பிடிக்க அதிலிருந்து காயங்களுடன் தப்புகிறான். நாய்களுடன் போராடி சாப்பிட்டு புதர்களின் கிடக்கிறான். டிடெக்டிவ் டைலன் டாக்கின் நாய் அவனைக் கண்டுபிடிக்கிறது. பேசமுடியாத காது கேட்காத தன்மையில் இருக்கும் ஜானி யார், அவனை ஊனமாக்கியது எந்த கும்பல், அவனது பெற்றோர் எங்கே? ஆகிய கேள்விகளுக்கு விடைதேடும் பயணம்தான் வாராதோ ஓர் விடியலே? இதில் டைலன் டாக்கின் ஏழ்மை அவரது பி.ஏ க்ரௌச்சோ மூலம் சொல்லப்படுகிறது. மற்றபடி ஹீரோ அதிரடிக்கிறார் என்பதோடு அடியும் வாங்குகிற