இடுகைகள்

மருத்துவம் - அக்வாதெரபி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அக்வா தெரபி - பரவும் புதிய நீச்சல் பயிற்சி!

படம்
ஜிம் தேவையில்லை; நீச்சல் குளம் போதும்! -– ச.அன்பரசு உலகளவில் நீர் மூலம் உடல், மனம் வளர்ச்சி பெறுவதற்கான அக்வாதெரபி பயிற்சி முறைகள் பிரபலமாகி வருகின்றன. பூமியின் மகத்தான பொக்கிஷம் தங்கம், வைரம், வைடூரியமல்ல; நீர்தான். நதிக்கரையோரம் தொடங்கிய நாகரிகம் டெக் பாய்ச்சலில் வளர்ந்தாலும் நிறமற்ற மணமற்ற திரவமான நீரின் பங்களிப்பு இல்லையேல் உயிரினங்களின் உலகவாழ்க்கை அன்றோடு முடிவுக்கு வந்துவிடும். தொன்மை கிரேக்கம், சீனம், ரோம், எகிப்து ஆகிய நாடுகளில் நோயுற்றவர்களுக்கு நீர் மூலம் சிகிச்சை(ஹைப்போதெரபி) அளிக்கப்பட்டது என்பது தொல் மருத்துவரான ஹிப்போகிரேடஸ் வாக்கு.   உலகளவில் அக்வாதெரபி பிரபலம் என்றாலும் இந்தியாவில் இப்போதுதான் மெல்ல புகழ்பெற்று வருகிறது. ஹலிவிக், பர்டென்கா, வாட்ஸூ, அய் சி என பல்வேறு பெயர்களில் அக்வாதெரபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. ”அக்வாதெரபி முதலில் மருத்துவத்துறை சார்ந்ததாகவே இருந்தது. இப்போது அதன் பயன்களைப் பார்த்து பல்வேறு ஆரோக்கிய மையங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்” என்கிறார் அக்வாதெரபி ஆலோசகரான பிரசாந்த். அக்வாதெரபியின் அர்த்தம், நீரில