பெண்களுக்கு எதிரான அநீதிகளை மிரட்டலுக்கு அஞ்சாமல் தட்டிக் கேட்கும் யோகிதா பாயனா!
யோகிதா பாயனா, வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பேசி வருகிற குரல்களில் ஒருவர். பேச்சு மட்டுமல்ல. களத்திலும் செயல்பட்டு ஆதரவாக நிற்பவர். அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதிலும் இந்தியா போன்ற மதவாத நாட்டில் வல்லுறவுகள், பாலியல் வல்லுறவு தாக்குதல், சுரண்டல்களுக்கா பஞ்சம்.அதனால் அவருடைய ட்வீட்களைப் பார்த்தால், ஒரு குற்றம் அடுத்த குற்றம் என அப்படியே மாறி மாறி சென்று கொண்டே இருக்கிறது. பார்ப்பன தர்மத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதால், அவர்களை அமைப்பு ரீதியாக சுரண்டுவதற்கு அரசு அனுமதிக்கிறது. எனவே, அவர்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் தொடர்பான வல்லுறவு, தாக்குதல், மிரட்டல் விவகாரங்கள் ஊடகங்களில், அரசின் புள்ளிவிவரங்களில் தவிர்க்கப்படுகின்றன.
யோகிதா பாயனா - பீப்பிள் அகெய்ன்ஸ்ட் ரேப் இன் இந்தியா -பாரி எனும் அமைப்பை நடத்தி வருகிறார். பெண்களுக்கு தெருவில் நடக்கும் தாக்குதல்கள், கணவர் குடும்ப வன்முறைக்கு உட்படுத்துவது ஆகியவற்றையும் கூட வெளியே கூறுமாறு வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறார். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் தினசரி 81 பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுவதாக அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவிக்கிறது. இப்படியான வல்லுறவுகளுக்கு காரணம், பெண்களுக்கு அறிமுகமான ஆண்கள் என்று பாயனா கூறுகிறார். வல்லுறவு இல்லாத இந்தியா என்பதை தனது லட்சியமாக கொண்டு இயங்கி வருகிறார். எப்ஸ்டீன் ஃபைலில் நாட்டின் பிரதமர், அமைச்சர் பெயர் வந்தப்பிறகு கூட அம்மணிக்கு இப்படியான நம்பிக்கை உள்ளது.
2017ஆம் ஆண்டு உன்னாவோ வல்லுறவு வழக்கில் இந்தியா கேட் அருகே போராடியவரை காவல்துறை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்று அகற்றியதை காணொளிகளில் பார்த்திருப்பீர்கள். இதற்கு காரணம், டெல்லி உயர் நீதிமன்றம், தனது முதலாளிகளின் ஆணைக்கு ஏற்ப முன்னாள் பாஜக கட்சி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை பிணையில் விடுவித்தது. இதற்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார் இருக்கும் இடத்திற்கு 5 கி.மீ. தொலைவுக்கு வரக்கூடாது என வழிகாட்டல் வேறு. ஒருவகையில் குற்றம் செய்த குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவரை சிறையில் அடைப்பதைப் போல. பின்னாளில், போராட்டம் வலுத்து நிலைமை மோசமானதும் பார்ப்பன உச்சநீதிமன்றம் வேறு வழியின்றி குற்றவாளியின் பிணையை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பியது.
முன்னாள் எம்எல்ஏ என்றாலும் வல்லுறவு செய்யப்பட்டவரை வலதுசாரி பார்ப்பன பாசிச மதவாத கட்சி தொண்டர்கள் விட்டுவிடுவார்களா? இணையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தி வந்தனர். இதில் பாலியல் வல்லுறவு குற்றவாளியின் குடும்பத்தினரும் அடக்கம். அதாவது குல்தீப்பினுடைய பெண்களும் உண்டு. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை இணையத்தில் வெளிப்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தனர். பாயனா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்ககு காவலாக இருப்பதோடு, அவருக்கு கௌன்சலிங் உதவிகளையும் செய்து வருகிறார். அடுத்து அவர் எங்கே செல்லவேண்டும் பீகாரின் பாட்னாவா, அல்லது மணிப்பூரா? பாட்னாவில் வலதுசாரி மதவாத கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு, மருத்துவம் படித்து வந்த மாணவி தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். உடல் ஹாஸ்டலில் எடுக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு, மணிப்பூரில், ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண்ணை கடத்தி சென்று கும்பல் வல்லுறவு செய்து, சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
நான் இரண்டு இடங்களுக்கும் செல்லவேண்டி உள்ளது. நீங்கள் டெல்லியில் பார்த்தாலுமே கூட அதுமாதிரியான நிறைய வழக்குகளைப் பார்க்க முடியும். பலரும் புறக்கணித்த கவனம் கொள்ளாத வழக்குகளை கையில் எடுத்து போராடி வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகளில் களைத்து போயிருக்கிறீர்களா என்று கேட்டபோது, விரக்தி, களைப்பு, நிறைய முறை இதை விட்டுவிடலாமா என்று தோன்றியிருக்கிறது. சில சமயங்களில் எந்த திசையில் போவது என திகைத்து நி்ன்றிருக்கிறேன் என பதில் கூறினார்.
பொதுவாக, இந்தியாவில் சாதி சார்ந்த நீதிகளே அதிகம். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஒன்று என்றால், யாரும் உதவ மாட்டார்கள். அவர்கள் பாட்டிற்கு வேடிக்கை பார்த்துவிட்டு போய்விடுவார்கள். 2002ஆம் ஆண்டு சாலையில் விபத்துக்குள்ளான ஒருவர் ரத்தம் வெளியேறி இறப்பதைக் கண்ணால் கண்டார். அவருக்கு பெரிதாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனை, தேமேயென்று இருக்க, பாயனார கெஞ்சிக்கேட்டும் எந்த மருத்துவரின் உதவியும் கிடைக்கவில்லை. அந்த உயிர் பறந்துபோனது. பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டைப் பெற்றுத் தந்தார். கணவன் இல்லையென்றால், பெண்ணை சமூகம் இரையாக்க துடிக்கும் அல்லவா? அந்த கோரமும் நடைவேறியது. பாயனா, அவருக்கு வழிகாட்டுதலை வழங்கவிலை. அரசு மருத்துவமனைக்குள் எப்போது சென்றாலும் பாயனாவுக்கு கண்கள் சிவந்துவிடும். இப்போது பிரச்னைகளை பற்றி புகார் கொடுத்து போராட அவருடன் சிலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த சூழ்நிலை அமையவில்லை. பாயனா, பேரிடர் மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தற்போது சட்டக்கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார்.
தொடக்கத்தில் தேசிய பெண்கள் கமிஷனில் தன்னார்வலராக இணைந்து இருக்கிறார். பின்னர்தன் பாரி எனும் அமைப்பைத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி ஜோதி சிங், குழு வல்லுறவுக்கு ஆளானார். நிர்பயா வழக்குக்கு பிறகு பாயனா, போராடி வழக்கு அது. ஜந்தர் மந்தரில் நிலையாக உட்கார்ந்து போராடினார். அதற்குப் பிறகே பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி போனில், கூறத்தொடங்கியுள்ளனர்.அரசுக்கு, அதன் எந்திரத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில் தேசிய பெண்கள் கமிஷனில் செய்து வந்த பணியைக் கைவிட்டிருக்கிறார். அப்படித்தான் பாரி என்ற அமைப்பு உருவாகிறது. இது பத்திரிகையாளர் சாய்நாத்தின் பாரி அல்ல. பாயனாவின் பாரி.
குற்றவாளி கைதாவதும், பிறகு அவரை குற்றத்தின் அடிப்படை அல்லாமல் வயது கருதி வெளியே விட்டுவிடுவதும் இந்தியாவில் நடைபெறுகிற வழமைதான். அதற்கு எதிராக ஜோதி சி்ங்கின் அம்மாவோடு சேர்ந்து சிறுவர் காப்பகத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார் பாயனா. ஜோதி சிங்கை வல்லுறவு செய்தவர்களில் ஒருவரான மைனர், வயது காரணமாக வெளியே விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதை எதிர்த்துத்தான் போராட்டமே. ராஜ்யசபையில் நிலுவையில் இருந்த மசோதா, மைனர் குற்றவாளிகளின் வயதை குறைக்கும் திட்டத்தைக் கொண்டது. அதாவது அவர்களின் குற்றத்தைப் பொறுத்து விடுதலையாவதை தடை செய்வது. அதை நடைமுறைக்கு கொண்டு வர பாயனா குரல் கொடுத்தார். சமூகம், குற்றவாளிகளுக்கு எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ளாத நிலையில் வெறும் தண்டனை மட்டும் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடமுடியும்?
பாயனாவின் பயணம் அதற்குப் பிறகுதான் நீளத்தொடங்கியது. பாக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை, கதைகளை, அதிலுள்ள வேதனையை உணரத் தொடங்கினார். ஒரு பெண் மருத்துவராக விரும்பினார். ஒருவர் பெண்ணாக இருந்தால் போதும் என்று கருதினார். இறந்துபோன பெண்களின் குடும்பத்திடமிருந்து அவர்களின் கனவைக் கேட்டபிறகு, ஆசைகளைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது, பல நாட்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறேன் என்றார்.
2007ஆம் ஆண்டு அரசு பதிமூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 53.22 சதவீதம் குழந்தைகள் பாலியல் ரீதியான சுரண்டலை எதிர்கொண்டனர் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமிகள் என்றால் பத்தில் ஒன்பது பேரும், சிறுவர்கள் என்றால் பத்தில் ஐந்து பேரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இதைப் பலரும் புகாராக தெரிவிப்பதில்லை. அதைப்பற்றி பேசுவதும் இல்லை. உடலில் காயம் இருந்தால், அல்லது மருத்துவ ரீதியாக சிகிச்சை செய்யும்போது மட்டும்தான் அதை பொருட்படுத்துகிறார்கள். மற்றபடி அதைப்பற்றி பேசுவதில்லை. பாலியல் வல்லுறவு பற்றி பெரிதாக கவலைப்படாமல் அலட்சியப்படுத்தும் அரசியல்வாதிகளை தனியாக பிரித்து வைத்து அவர்களை பாயனா இணையத்தின் வழியாக பின் தொடர்ந்து வருகிறார். பாலியல் சுரண்டல் வழக்கை, கர்நாடக அமைச்சர் ஒருவர் சிறிய சம்பவம் என்று கடந்துபோனதை சுட்டிக்காட்டுகிறார். பாயனா,தன்னுடைய ஆதரவாளர்களிடையே இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறி வருகிறார்.
பெண்கள் தங்களுடைய பிரச்னைகளை தங்களை சூழ்ந்துள்ள அநீதிகளைப் பற்றி துணிச்சலாக பேச முன்வர வேண்டும். மோசமான, வன்முறையான உறவு இருந்தால் அதை கைவிட்டு வெளியேற வேண்டும் என்று பாயனா விரும்புகிறார்.
நன்றி
தி இந்து - யோகிதா பாயனா - ஸ்டாரிங் டவுன் டார்க்னெஸ்
பிரியா ரமணி

கருத்துகள்
கருத்துரையிடுக