இடுகைகள்

2018 - சிறந்த விளையாட்டுகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2018 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டுகள்!

படம்
களமாடு விளையாடு! –- 2018 FORZA HORIZON 4 மைக்ரோசாஃப்ட் ஸ்டூடியோ தனது எக்ஸ்பாக்ஸ்   E 2018 மாநாட்டுக்கு பிறகு வெளியிட்ட தீப்பறக்கும் கார் பந்தய விளையாட்டு. அழகிய கார்கள், சுவாரசிய சவால்கள் என விளையாட்டு கார் விரும்பிகளுக்கு செம தீனி. வடிவமைப்பு பென் தாக்கர்-ஃபெல் RED DEAD REDEMPTION 2 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட் டெட் ரிடம்ஷனின் தொடர்ச்சி. மேற்கத்திய நாடுகளின் நிலப்பரப்பிலமைந்த சாகச சண்டை விளையாட்டினை ராக்ஸ்டார் கேம் டிசைனர்களாக இம்ரான் சர்வார், கிறிஸ்டியன் காண்டமெஸா ஆகியோர் வடிவமைத்துள்ளனர். DESTINY 2: FORSAKEN பழிவாங்கும் கதைதான். ஆயுதங்களில் ஸ்நைப்பர், ஷாட்கன்கள் புதிதாக இணைந்துள்ளன. சண்டைக்காட்சிகளுக்கான பின்புற வடிவமைப்பு விளையாட்டை அற்புதமாக்குகிறது.   NO MAN’S SKY NEXT   ஆபத்து சூழல்களில் தப்பித்து பிழைத்தால் நீங்கள்தான் பிஸ்தா. ஹலோ கேம்ஸின் தயாரிப்பில் காரத் பௌர்ன் வடிவமைப்பில் சாகச விளையாட்டு. பலரும் இணைந்து விளையாடி கலக்கலாம்.