இடுகைகள்

சத்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுமாற்ற உணவுகள்!

படம்
  மரபணு மாற்ற உணவுகள் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவுப்பயிர்களை விளைவிப்பது கடினம். எனவே, விளையும் பயிர்களிலுள்ள மரபணுக்களை மாற்றியமைத்து அதனை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுவதை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். இதைத்தான் மரபணுமாற்ற பயிர்கள் (GM Foods) என்கிறார்கள். மரபணு மாற்ற பயிர்களில் பூச்சித்தாக்குதல் குறைவு, சத்துகள் அதிகம், குறைந்த நீரே போதுமானது என நிறைய சாதகமான அம்சங்கள் உண்டு. இவை பல்வேறு தரப்பரிசோதனைகளைச் சந்தித்து சந்தைக்கு வருகின்றன. ஆனால் சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளில் சிலர், நீண்டகால நோக்கில் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.  தொண்ணூறுகளில் ஹவாய் தீவில் பப்பாளித் தோட்டங்களை ரிங்ஸ்பாட் என்ற வைரஸ் தாக்கியது. இதன் விளைவாக, அங்கு பப்பாளி தோட்டங்கள் வேகமாக அழியத் தொடங்கின. இதைத் தடுக்க அறிவியலாளர்கள் ரெயின்போ (Rainbow Papaya) என்ற பெயரில்  பப்பாளியை உருவாக்கினர். இது வைரஸ் தாக்கமுடியாதபடி மரபணுக்களை அமைத்து உருவாக்கியிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பப்பாளித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.   

இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!

படம்
pixabay காபி எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது.    கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர்.  காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது.  காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிற

சாக்லெட்டின் சுவை எங்கிருந்து வருகிறது?

படம்
mirror சாக்லெட்டுகளின் கதை முதன்முதலில் சாக்லெட்டுகள் இப்போது இருப்பது போல பாராக, சிறியவையாக கெட்டியான பொருளாக கிடைக்கவில்லை. மத்திய அமெரிக்காவில் கசப்பு பானமாக கண்டறியப்பட்டது. ஐரோப்பாவின் சந்தைக்கு வந்தபோது அதில் சர்க்கரை சேர்த்து பருகி வந்தனர். பின்னர் சாக்லெட்டை பதப்படுத்தி அதனை இன்றைக்குப் பார்க்கும் காட்பரீஸ், அமுல் டார்க் சாக்லெட் கொண்டு வந்துள்ளனர். சாக்லெட் தயாரிப்பு என்பது ஏறக்குறைய திராட்சையைப் பறித்துப் போட்டு பக்குவப்படுத்துகிறார்களே அதைப் போன்றதுதான். காபி பீன்ஸ்களை மெல்ல பதப்படுத்தி சாக்லெட்டைத் தயாரிக்கிறார்கள். சாக்லெட் என்றால் முழுமையாக சாக்லெட் மட்டுமே இருப்பதில்லை. சாக்லெட்டுடன் சர்க்கரை, பால் பொருட்கள், வாசனையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை கலக்குகின்றனர். வெள்ளை சாக்லெட்டில் பால் பொருட்களோடு கோகோ பட்டர் மட்டுமே இருக்கும். சாக்லெட்டில் குறைந்தளவு காஃபீன் காணப்படுகிறது. கூடவே ஊக்கமூட்டியான தியோபுரோமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளது. உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் 9 கி.கி சாக்லெட்டை ஆண்டுக்கு தின்று வருகிறார்கள். இன்று சாக்லெட் த

கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் மாத்திரைகளின் பிரபலத்திற்கு என்ன காரணம்?

படம்
giphy இன்று சல்மான்கான் முதல் பிரபலமாக உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை பல்வேறு மாத்திரைகளை தினசரி சாப்பிடச்சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். உண்மையில் இந்த மாத்திரைகளில் என்ன இருக்கிறது? உணவுப் பொருட்களிலிருந்துதான் கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகளை நாம் பெறவேண்டும். அப்படி இல்லாதபோது என்ன செய்வது? இதற்காகவே இந்த மாத்திரைகளை மருந்து கம்பெனிகள் தயாரித்து மக்களின் தலையில் கட்டுகின்றன. தவறு ஒன்றுமில்லை. உங்கள் உடலுக்கு இச்சத்துகள் போதாமை என்றால் நீங்கள் இம்மாத்திரைகளை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நம் உடலில் உள்ள எலும்புகளில் 99 சதவீதம் கால்சியம்தான். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவ ஜிங்க் உதவுகிறது. சூரிய ஒளியிலுள்ள விட்டமின்  டியை உடலில் இழுக்க மெக்னீசியம் உதவுகிறது. மேலும் கால்சியத்தை உடல் உட்கிரகிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் இரண்டும் மூளையின் செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு சிறப்பாக நடைபெற அவசியம் தேவை. இப்பணிக்கான சத்துகள் உடலுக்கு கிடைக்காதபோது அதனை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உடலின்

பால் எலும்புகளை வலுப்படுத்தும் என்பது உண்மையா?

படம்
பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம். பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும். பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது. 1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி

எந்த வயதில் உடல் உறுப்புகள் செயல்திறனை இழக்கின்றன?

படம்
giphy இன்று இளைஞர்கள் முதியர்களைப் பார்த்து, 40 பிளஸ் ஆட்களை தீவிரமாக வெறுக்கிறார்கள். கிண்டலாக பேசுவதும், நேரில் பார்த்தால் சூப்பர் சார் என பாராட்டுவதாக இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சம வயது நட்பு என்பது வேறுதானே? நம் உடல் பாகங்கள் குறிப்பிட்ட வயதில் செல்களை இழந்து முதுமை பெறத் தொடங்குகின்றன. இதை தலைமுடிக்கு இண்டிகா டை அடித்தாலும் தடுக்க முடியது. கற்பகாம்பாள் மெஸ்சில் சுகாதார உணவு வாங்கி சாப்பிட்டாலும் வேலைக்கு ஆகாது. இருந்தாலும் உடற்பயிற்சி உடல் கட்டு விடாமல் பார்த்துக்கொள்ளும். இப்போது அந்த தகவல்களைப் பார்ப்போம். கண்கள் நம் உடலில் உள்ள எம்.பி குறிப்பிட முடியாத கேமரா. நாற்பது வயதில் தன் செயல்திறனை இழக்கத் தொடங்குகிறது. இதனால் முதலில் கண்புரை போன்ற பிரச்னைகள் தொடங்கும். பின் பார்வை தெளிவின்மை ஏற்படும். புகைப்பிடித்தல் இந்த விஷயங்களை இன்னும் வேகமாக்குகிறது. முடிந்தளவு வெயிலில், வெளியில் செல்கிறீர்கள் என்றால் குளிர்கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பவர் கிளாஸ் அணிந்திருந்தால், சென்னகேசவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு விதி அவ்வளவுதான். நுரையீரல் நுரையீ

செக்ஸை ஊக்குவிக்கும் தர்ப்பூசணி!

படம்
மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு?எப்படி? உணவுக்கும் செக்ஸூக்கும் சம்பந்தம் உண்டா? மேட் இன் சீனா டிரெய்லர் பார்த்துவிட்டு கேள்வி கேட்கிறீர்கள் போல. உணவு என்பது உடலுக்கான அனைத்து தேவையை நிறைவு செய்வது என்று புரிந்துகொள்ளுங்கள். உடலின் விந்து உற்பத்தி உடலின் இயற்கையான செயற்பாடுகளில் ஒன்று. உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் உடலைப் பராமரிக்க உதவுகின்றன. தர்ப்பூசணி பழம் இதுபோன்ற சமாச்சாரத்தில் கெட்டி. இதிலுள்ள எல் சிட்ருலின் என்ற வேதிப்பொருள், எரக்டைல் டிஸ்பங்க்ஷன் எனும் பாதிப்பை சரி செய்கிறது என கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலியைச் சேர்ந்த  பல்கலைக்கழகம் இதற்கான ஆராய்ச்சியை 2011 ஆம் ஆண்டு செய்தது. நன்றி: பிபிசி