சாக்லெட்டின் சுவை எங்கிருந்து வருகிறது?


Image result for women eating chocolate
mirror





சாக்லெட்டுகளின் கதை

முதன்முதலில் சாக்லெட்டுகள் இப்போது இருப்பது போல பாராக, சிறியவையாக கெட்டியான பொருளாக கிடைக்கவில்லை. மத்திய அமெரிக்காவில் கசப்பு பானமாக கண்டறியப்பட்டது. ஐரோப்பாவின் சந்தைக்கு வந்தபோது அதில் சர்க்கரை சேர்த்து பருகி வந்தனர். பின்னர் சாக்லெட்டை பதப்படுத்தி அதனை இன்றைக்குப் பார்க்கும் காட்பரீஸ், அமுல் டார்க் சாக்லெட் கொண்டு வந்துள்ளனர்.

சாக்லெட் தயாரிப்பு என்பது ஏறக்குறைய திராட்சையைப் பறித்துப் போட்டு பக்குவப்படுத்துகிறார்களே அதைப் போன்றதுதான். காபி பீன்ஸ்களை மெல்ல பதப்படுத்தி சாக்லெட்டைத் தயாரிக்கிறார்கள். சாக்லெட் என்றால் முழுமையாக சாக்லெட் மட்டுமே இருப்பதில்லை. சாக்லெட்டுடன் சர்க்கரை, பால் பொருட்கள், வாசனையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை கலக்குகின்றனர். வெள்ளை சாக்லெட்டில் பால் பொருட்களோடு கோகோ பட்டர் மட்டுமே இருக்கும்.

சாக்லெட்டில் குறைந்தளவு காஃபீன் காணப்படுகிறது. கூடவே ஊக்கமூட்டியான தியோபுரோமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளது.

உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் 9 கி.கி சாக்லெட்டை ஆண்டுக்கு தின்று வருகிறார்கள். இன்று சாக்லெட் திட வடிவிலிருந்து திரவ வடிவிலும் கிடைக்கிறது. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட் திறக்கும் சமயங்களில் கேட்பரீஸ் ஹாட் சாக்லெட் கிடைக்குமா என்று கேட்டுப்பாருங்கள்.

சாக்லெட்டை வாயில் போட்டு மெல்லும்போது கரையும்போது கிடைக்கிற சுவை வேறெப்போதும் அனுபவிக்காத ஒன்றாக இருக்கும். காரணம், சாக்லெட்டிலுள்ள பொருட்கள் அல்ல. அதிலுள்ள வேதிப்பொருட்களுக்கு மூளை தரும் ரியாக்ஷன்கள்தான் அவை. பெரும்பாலான சாக்லெட்டுகளில் பாலின் கொழுப்பு, சர்க்கரை மட்டுமே அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே, சாக்லெட் ஆபத்து தரும் பொருளாக மாறுகிறது. உண்மையில் கோகோ அதிகம் சேர்த்த சாக்லெட்டில் ஆன்டிஆக்சிடன்கள் அதிகம். மார்க்கெட்டில் காய்கறி விலையைக் கேட்டு உயரத்துக்குப் போன ரத்த அழுத்தம் கூட சாக்லெட் வாயில் கரையும்போது தற்காலிகமாக குறையும்.

பிரபலமான இடுகைகள்