இனி தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தை இ வாகனங்களே தீர்மானிக்கும்!
உதய் சிங் மேத்தா, கூடுதல் இயக்குநர், கட்ஸ்
நீங்கள் கூறும் சூழலுக்கு உகந்த மாறுதல்கள், போக்குவரத்து வாகனங்களால் வேலையிழப்பு ஏற்படுமே?
வேலையிழப்பு மட்டுமே நேராது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதுபற்றியும் நீங்கள் யோசிக்கவேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களின் கொள்கையிலேயே இதில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள், பேட்டரிகள், பழைய வண்டிகள் என இச்சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
குறைந்த கார்பனை வெளியிடுவது நகர்ப்புற அளவிலேனும் சாத்தியமாகுமா?
நகர்ப்புறங்களுக்கும் கிராம ப்புறங்களுக்கும் போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. உள்ளூர் அளவில் வாகனங்களை தயாரிப்பது மட்டுமே இதற்கான தேவையை ஈடுகட்டும். மாநில போக்குவரத்துத்துறை, மண்டலரீதியான போக்குவரத்துத்துறை அலுவலகம், போக்குவரத்து காவல்துறை, நகராட்சி ஆகியோரின் ஆதரவின்றி வாகனங்களை பயன்படுத்துவது கடினம். இதில் அதிர்ஷ்டவசமாக அரசு இ - வாகனங்களை ஆதரிக்கிறது. இதனால் , கோல்கட்டா போன்ற மாநிலத்தில் இ வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
இ வாகனங்களின் செலவு அதிகமாயிற்றே?
நீங்கள் அவற்றை வாங்கும்போது உள்ள விலையைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் பயன்படுத்தும் கரிம எரிப்பொருள் இஞ்சினை விட இ வாகனங்கள் திறன் மிக்கவை. முதலில் விலை அதிகம் போல என்று தெரிந்தாலும், இதன் பராமரிப்பும், பயணச்செலவும் குறைவு. அது உங்களுக்கு லாபம்தானே? மின் வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் தோராயமாக 21 கி.மீ பயணிக்கிறது. மேலும் கரிம எரிபொருட்களில் இயங்கும் வண்டிகளுக்கு இணையாக மின் வாகனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.
நன்றி - டைம்ஸ், 11,-3-2020, தாரு பால்.