தேர்வால் சோகத்திற்குள்ளாகும் மாணவர்கள்!





test doug GIF by Cheezburger




தேர்வு வரும் காலங்களில் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 72 நகரங்களில் செய்த ஆய்வில் 82 சதவீத மாணவர்கள் கடுமையான சோர்வையும் அழுத்தத்தையும் உணர்வதாக கூறியிருக்கிறார்கள்.

ஃபோர்டிஸ் மனநல திட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வலர்கள் இந்திய மாநிலங்களில் இதுபற்றி சோதனைகளை நடத்தினர். இதில் 25 சதவீதப் பேர் கடுமையான பதற்றத்தை தேர்வுக்காலங்களில் மனதளவில் சந்திக்கின்றனர். இவர்களில் அதிகளவு பதற்றத்தை சந்திப்பவர்களுக்கு ஐந்து எனும் ரேட்டிங்கை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர்.

இதில் 13 சதவீத மாணவர்கள் மட்டும் குறைந்தளவு பதற்றம் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளனர்.  “நாம் மாணவர்களுக்கு தேர்வு கால பதற்றம் பற்றி குறைவாகவே விவாதித்துள்ளோம். ஆனால் இந்த ஆய்வில் குறைந்தளவேனும் தேர்வு பற்றிய பதற்றத்தை மாணவர்கள் உணருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான மருத்துவர் சஞ்சய் பாரிக்.

மாணவர்களிடம் நெருங்கிப் பேசினால்தானே அவர்களின் மன அழுத்தம் வெளியே தெரியவரும். இதற்காக 24 பேர் கொண்ட தன்னார்வக்குழுவை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளனர். இதனால் மாணவர்களை நெருங்கி பழகி அவர்கள் ஆய்வுகளை செய்துள்ளனர்.

படிக்கிற பயலுக்கு என்ன மன அழுத்தம்? என சிலர் நினைக்கலாம். இந்தியாவில் 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு அறையில் பதில்கள் சட்டென மறந்துபோகிறது. இதற்கு காரணம், அதிக மதிப்பெண், கல்லூரி, கட் ஆஃப் ஆகிய கவலைகள்தான் காரணம். தோற்றுப்போவது என்பது இங்கு அவமானகரமாக கருதப்படுகிறது. அது அவமானமல்ல, வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை மாணவர்கள் உணரவேண்டும். மதிப்பெண்களால் மட்டுமே வாழ்க்கை கட்டி எழுப்பப்படுவதில்லை இதை மாணவர்களோடு பெற்றோர்களும் உணரவேண்டும்.

இதுபற்றிய ஆடியோ பதிவைக் கேட்க தோழர் பாலபாரதியின் பக்கத்தை அணுகுங்கள்.

https://anchor.fm/balabharathi/episodes/tholviyaipazhaguvom-eb8v8m

நன்றி - எகனாமிக் டைம்ஸ்